Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமாடிட்டி விலை வீழ்ச்சி...!

 

- ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

கடந்த வாரத்தில் இன்டர்நேஷனல் மானிடரி பண்ட் (IMF ) உலக பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் குறையக்கூடும் என்கிற அறிவிப்பை வெளியிட்டது. இது சந்தைப் பொருட்களின் விலை மேலும் சரிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, எண்ணை முதல் காட்டன் வரை அனைத்து பொருட்களும் விலை சரிந்துள்ளன. மேலும், ஜூலை மாதத்தில்,சீனா தனது எண்ணை மற்றும் காப்பர் இறக்குமதியை மிகவும் குறைத்துள்ளது முக்கிய காரணமாகும். 

சீனாவின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள்,பயன் தரத்தக்க வகையில் அமையவில்லை .

அமெரிக்க டாலரின் மதிப்பானது, 6 வளர்ந்த நாடுகளுக்கு எதிராக அதிகரித்துள்ளது. உலக அளவில் ,  பெரும்பாலான, சந்தைப் பொருட்கள், அனைத்தும் டாலரில் வர்த்தகம் நடைபெறுவதால்,தற்போது சந்தைப்பொருட்களில், விலைச் சரிவு கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 

இந்த வருடம் ஜூன் 30 ம் தேதி முடிவடைந்த காலத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு 10 நாடுகளுக்கு எதிராக 5.6% அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் எண்ணை உற்பத்தி தற்போது அதிகரித்து காணப்படுவதால், கச்சா எண்ணை விலையனாது, கீழ்நோக்கி வர்த்தகம் நடைபெறுகிறது,

சர்வதேச அளவில் கோகோ,காபி இவைகளைத் தவிர, உலோகம் / விவசாய பொருட்கள் அனைத்தும் இறங்கு முகத்தில் இருக்கின்றன .

  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close