Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூகுள் தேடிய தமிழன் - சுந்தர் பிச்சை

 கூகுள் தேடிய தமிழன் - சுந்தர் பிச்சை

 
மைக்ரோசாப்டிற்கு சிஇஒ வை தேர்ந்தெடுக்கும் போது பரபரப்பாக பேசப்பட்ட தமிழர் சுந்தர் பிச்சை.அப்போது வந்த தகவல்களின் அடிப்படையில் மைக்ரோசாப்டிற்கு சிஇஒ ஆவதற்கான வாய்ப்புகள் சுந்தர் பிச்சைக்கு பிரகாசமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சத்ய நாதெள்ளாவின் வலிமையான பணிப் பின்னனியின் காரணமாக அப்பதவி அவருக்கு வழங்கப்பட்டது. பின் டிவிட்டர் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு விட்டதாக டிவிட்டரிலேயே வதந்திகளை பரப்பினர்.
 
கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து கூகுளில் பணியாற்றி வரும் இவர் தன் சிறந்த செயல்பாடுகளின் காரணமாக மிகக் குறைந்த காலத்தில் முக்கிய பதவிகளை பெற்றார்.தற்போது தலைமைத் துணைத் தலைவராக இருக்கும் சுந்தர் பிச்சை கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு போன்ற துறைகளை கவனித்து வந்தார்.இந்நிலையில் கூகுள் நிர்வாகம் அவரது முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆய்வு,தேடல்,விளம்பரம்,கட்டமைப்பு,மேப்ஸ்,ஆப்ஸ் போன்ற துறைகளையும் அவரின் கண்காப்பிலேயே விட்டுவிட்டது.இதனால் மேற்குறிய துறைகளில் பணியாற்றுவர்கள் அனைவரும் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டின் கீழ் தங்களது பணியை மேற்கொள்வார்கள் என்று கூகுள் கூறியுள்ளது.
 
சுந்தர்பிச்சையின் கீழ் ஆண்டிராய்ட் துறை சிறப்பான வளர்ச்சியை எட்டியது.ஆண்டிராய்ட் ஒன் என்ற திட்டத்தில் 5 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்தது.இத்திட்டத்திற்கு இந்தியாவை முக்கியமான சந்தையாக்கினார்.
 
உலகமே இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் ப்ரௌசரை உபயோகித்து சலித்து இருக்கும் போது.அதை விட பல மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் குரோம் ப்ரௌசரை களம் இறக்கி உலகிலேயே அதிக பயணாளர்களைக் கொண்ட ப்ரௌசராக்கினார்.கூகுள் டிரைவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.இவரது திறமையால் ஈர்க்கப்பட்ட லாரி பேஜ் சுந்தரை முக்கிய பொறுப்புகளுக்கு உயர்த்தியிருக்கிறார். மேலும் வெப் எம் எனப்படும் புதிய கண்ணொளி வடிவத்தை உருவாக்கியவர் ஜைவ் மென்பொருளின் இயக்குநர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
இதனிடையில் வாரி பேஜ் கூகுளின் செயல்பாடு,நிர்வாக மேம்பாடு,சட்டம்,நிதி,கூகுள் எக்ஸ் போன்ற துறைகளை கவனிக்க உள்ளார். இந்த நிகழ்வு கூகுளின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும்
 
 
உலகெங்கிலும் உள்ள மென்பொருள் சார்ந்தவர்களுக்கு நன்கு தெரிந்த இவர் படித்தது ஐஐடி கரக்பூரில் தான்..அவரின் கல்லூரி சார்ந்த சான்றிதழ்களில் அவர் பெயர் பி.சுந்தர் ராஜன் என்றே இருக்கிறது.சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு தற்போது வயது 42. தன் பள்ளிக்கல்வியை ஜவகர் வித்யாலயாவிலும் பி.இ(மெட்டலர்ஜி) படிப்பை ஐஐடி கோரக்பூரில் முடித்தவர்.உலோகங்கள் சம்பந்தப்பட்ட படிப்பை படித்தாலும் இவருக்கு எலக்ட்ரானிக்ஸிலும் அதிக ஆர்வம் அதிகம். ஐஐடி கரக்பூரின் மெட்டலர்ஜி துறையில் 1989ல் இருந்து 1993 வரையில் படித்த பிச்சை அத்துறையின் முதல் மாணவராக தேறி இருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் கல்லூரி அளவில் அந்த ஆண்டிற்கான வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருக்கிறார். ஸ்டேன்ட்போர்டு பல்கலைக் கழத்தில் எம் எஸ் முடித்துள்ளார்.பென்சில்வேனியா யுனிவர்சிட்டியில் மேலான்மை பட்டம் பெற்ற கையோடு மெக்கன்சி நிறுவனத்தின் மென்பொருள் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்தார்.பின்னர்தான் கூகுளில் இவரது வாழ்க்கை தொடங்கியது.
 
''கூகுளில் தேடிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இடையில் கூகுள் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழர் சுந்தர் பிச்சை. 
 
- பா.குமரேசன் (மாணவப் பத்திரிக்கையாளர்)
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close