Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேது சமுத்திரம் திட்டம் நடைமுறைச் சாத்தியமில்லை - நிபுணர்கள்

 

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட சேது சமுத்திரம் திட்டம் நடைமுறையில் நிறைவேற்றுவதற்குச் சாத்தியமில்லை என தொழில் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்தத் திட்டம் தொடர்பான பாதையை விமானம் மூலம் இன்று பார்வையிட முடிவு செய்திருக்கிறார்.

சேது சமுத்திரம் திட்டம் பொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியப்படாது என்றும் இந்தத் திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் எனவும் தொழில் துறை நிபுணர்கள் சொல்லி இருக்கின்றனர். என்றாலும் இந்தத் திட்டத்துக்கு மாற்று என்ன என்பதை கண்டுபிடிக்கிற முயற்சியிலும் அவர்கள் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தவிர, தி.மு.க. ஆதரவுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதால், அ.தி.மு.கவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close