ஸ்டீவ் ஜாப்ஸ் சிலையை அகற்றியது ரஷ்யா: டிம் குக்கின் ''ஓரின சேர்க்கையாளர்'' அறிக்கை தான் காரணம்!
ஸ்டீவ் ஜாப்ஸ் சிலையை அகற்றியது ரஷ்யா
டிம் குக்கின் ''ஓரின சேர்க்கையாளர்'' அறிக்கை தான் காரணம்!

கடந்த வாரம் ஆப்பிள் சிஇஓ டிம் குக் தன்னை ஒரு ஓரின சேர்க்கையாளன் என அறிவித்ததை தொடர்ந்து ரஷ்யாவில் நிறுவப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் சிலை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் விதிமுறைப்படி ஓரின சேர்க்கை என்பது அவர்களது சட்டத்திற்கு புறம்பான ஒன்று என்பதால் இந்த சிலை அகற்றப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் வானோலி ஒன்று கூறியுள்ளது.
ஆனாலும் டிம் குக்கின் இந்த அறிவிப்பை பல தொழில்நுட்ப துறை சிஇஓக்கள் வரவேற்று கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிம் குக்கின் இந்த அறிவிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு பல நாடுகளில் சர்ச்சைக்குரிய விவாதங்களை எழுப்ப காரணமாகியுள்ளது. இருந்தாலும் இது தனிமனித கருத்தே தவிர ஆப்பிள் நிறுவனத்தின் கருத்து அல்ல என சிலர் கூறுகின்றனர்.