Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 28000 புள்ளிகள் புதிய உச்சம்!

  

11.40 மணி நிலவரம்.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை 10 மணிக்கு 28000 என்ற புதிய உச்சத்த தொட்ட பிறகு மீண்டும் பழைய நிலையிலே வர்த்தகமாகி வருகிறது. இதில் வங்கி பங்குகளின் விலை அதிகரித்தும்,மெட்டல் பங்குகளின் விலை சரிந்தும் வர்த்தகமாகி வருகிறது. 

 

எஸ்பி, சன்பார்மா, ஆக்ஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஐசிஐசிஐ பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. கோல் இந்தியா, எம் அண்ட் எம், ஹிண்டால்கோ  மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகளின் விலை சரிந்துள்ளது.

 

10.40 நிலவரம்!

இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 28006 என்ற நிலையை அடைந்து மீண்டும் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. 28 ஆயிரத்துக்கு மேல் சந்தை சென்றது இதுவே முதல் முறையாகும். 

 

 

 

 காலை 9:30 மணி நிலவரம்!

 
இன்று (05.11.2014) காலை 9:30 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் ஏற்றத்தில் துவங்கியுள்ளன. சென்செக்ஸ் 70 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 27940 புள்ளிகள் என்ற உச்ச அளவையும்,தேசிய பங்குச்சந்தை நிஃப்டி மாற்றமின்றி 8324 புள்ளிகள் என்ற அதேநிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இந்த ஏற்றத்திற்கு டாலரின் மதிப்பில் ஏற்பட்ட சிறிய சரிவும், அதனால் இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுமே என கூறப்படுகிறது.இன்றைய நாளில் 609 பங்குகள் விலை அதிகரித்தும், 144 பங்குகள் விலை குறைந்தும், 37 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன.
 
சர்வதேச சந்தைகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய நாளின் முடிவில் வீழ்ச்சியை சந்தித்ததும் இதற்கு காரணமாகியுள்ளன.கமாடிட்டியை பொறுத்தமட்டில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலை குறைந்தே காணப்படுகிறது.
 
டாடா பவர், டிசிஎஸ், ஐசிஐசிஐ நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டாடா மோட்டார்ஸ், ஹச்.யூ.எல், மாருதி நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன. 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close