Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2014-ன் சக்திவாய்ந்த மனிதர்கள்!

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட            ஆய்வின்படி உலகின் 21014-ம் ஆண்டிற்கான மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் 72 பேரின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் நாட்டின் தலைவர்களாக இருப்பவர்கள் 17 பேரும், பிரபல நிறுவனத்தின் சிஇஓ-க்கள் 39 பேரும் இடம் பிடித்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற சிலரும் இந்த 72 பேரில் அடக்கம் எனவும், இந்த தரவரிசை பட்டியலில் முதன் முறையாக இரண்டு பெண்கள் முதல் பத்து இடங்களுக்குள் தங்களை நிலைநாட்டி இருக்கிறார்கள் எனவும், அதே போல 12 பேர் இந்த பட்டியலில் புதிதாக இடம்பிடித்தவர்கள் என்பதையும் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் முதல் இடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ் இந்த தரவரிசை பட்டியலில் பிடித்திருக்கும் இடம் ஏழு.

புதிதாக இடம்பிடித்துள்ள 12 பேரில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். இவரது இந்த பட்டியலில் 15 வது இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார். இவரைபோலவே எகிப்தின் ஜனாதிபதி அப்டெல் எல் சிசி 51 -வது இடத்தை பிடித்திருக்கிறார். சீனாவின் அலிபாபா இகாமர்ஸ் நிறுவனத்தின் நிறுவனம் ஜாக்மா இந்த தரவரிசையில் 30-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் இந்த பட்டியலில் ஒன்பது பெண்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரவுசப்  மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குனர் கிரிஸ்டின் லகார்டி ஆகியோர் 31 மற்றும் 33-வது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close