இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் சென்னையில் சொத்து கண்காட்சி
இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் சென்னையில் 52 வது ப்ராப்பர்ட்டி கண்காட்சியை நடத்த உள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 150 க்கும் அதிகமான பில்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முக்கியமாக ரூ. 5 லட்சத்தில் ஃபிளாட் கட்டி கொடுக்கும் பில்டர் முதல் ரூ.3 கோடி வரையிலான வில்லா வீடு கட்டித்தருகிற பில்டர்களரென பலரும் பங்கேற்க உள்ளனர்.

பில்டர்கள் தவிர, வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள், வீட்டின் உள் அலங்காரம் செய்து தரும் நிறுவனங்கள் என பலரும் பங்குபெறும் இந்த கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடக்க உள்ளது.
இந்த கண்காட்சியில் முன்னணி கட்டுமான துறையினர் பலரும் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக நவின்’ஸ் ஹவுசிங், பி டாட் ஜி, எல் அண்ட் டி ரியால்ட்டி, அருண் எக்ஸெல்லோ, மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு தவிர கேரளா மாநிலத்தில் இருந்தும் ஸ்கைலைன், ஆலிவ் பில்டர்ஸ், ஜோஸ் ஆலுக்காஸ், கோரல் குழுமம், பெர்ன் வேலி ஆகிய கட்டுமான நிறுவனகளும் கலந்து கொள்கின்றன.
வீட்டின் அமைப்புகளை பிரிண்ட் மற்றும் டிஜிட்டல் என இரண்டு வடிவங்களிலும் பார்வையிடும் வகையில் இதற்கென்று 3டி பேனோ எக்ஸ் என்கிற புதிய தொழில் நுட்பம் பயன்படுத்த உள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
இந்த கண்காட்சி குறித்து இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ் வாசுதேவன் கூறுகையில், ‘‘உற்பத்தி, கல்வி, ஐ.டி. துறை ஆகிய துறைகளில் சென்னை கடந்த சில ஆண்டுகளாகவே வளர்ந்து வருகிறது. ரியல் எஸ்டேட் துறையும் சீரான வளர்ச்சி பெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை சொந்த வீடு, வாடகை வீட்டுக்கான தேவை, முதலீட்டாளர் சந்தை ஆகியவை தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. கடந்த ஆறு மாதங்களில் ரியல் எஸ்டேட் விற்பனை குறைவாக இருந்தபோதிலும், வீடு வாங்க விரும்புவோர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். ‘இன்னும் சற்று பொறுத்துப் பார்க்கலாம்’ என்ற மனநிலையில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவந்து புதிய வீடுகளை வாங்கும் மனநிலையை இந்த கண்காட்சி உருவாக்கும்" என்றார்.
வீடு வாங்க விரும்புபவர்கள், ஒரே இடத்தில் பல பில்டர்களும் பங்கு பெறும் இந்த கண்காட்சியை பயன்படுத்திக் கொண்டால் வீடு வாங்கும் விஷயத்தில் சரியான முடிவு எடுக்க
முடியும்.