மீண்டும் புதிய உச்சத்தில் சென்செக்ஸ்!
மீண்டும் புதிய உச்சத்தில் சென்செக்ஸ்
12.00 மணி நிலவரம்:
இன்று காலை புதிய உச்சத்தில் வர்த்தகத்தை துவங்கிய சந்தை மீண்டும் ஒரு விதமான நிலையில் வர்த்தகமாகி வருகிறது. மத்தியம் 12.00 மணியளவில் சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்ந்து 28204 என்ற புதிய உச்சத்திலும், நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து 8434 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.81 என்ற நிலையில் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சீசா ஸ்டெர்லைட், பார்தி ஏர்டெல், பஞ்சாப் நேஷனல் பேங்க், பிஹெச்இஎல் ஆகிய பங்குகளின் விலை அதிகரித்தும், ஹெச்டிஎஃப்சி, அல்ட்ரா டெக் சிமென்ட் ஆகிய பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.
புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி
காலை 9:30 நிலவரம்:
இன்று காலை ஏற்றத்துடன் துவங்கிய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 28200 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 67 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 13 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 28246 புள்ளிகள் என்ற புதிய அளவிலும், நிஃப்டி 8444 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.81 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 0.5 சதவிகிதம் சரிந்து 26,330 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சூழல்கள் சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன.ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு, மேலும் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளதும், இந்த ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன.
குறிப்பாக பிஎன்பி, கெயில், கோல் இந்தியா பங்குகள் விலை அதிகரித்தும், ஆக்ஸிஸ்,ஹச்டிஎஃப்சி,ஏசியன் பெயிண்ட்ஸ்நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.