Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியது கோட்டக் மஹிந்திரா வங்கி!

 ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியது கோட்டக் மஹிந்திரா வங்கி!

 
கோட்டக் மஹிந்திரா வங்கி பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை வாங்கியுள்ளது. இந்த வங்கியை சுமார் 15000 கோடி ரூபாய்க்கு மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இணைப்பிற்கு பிறகு இந்தியாவில் உள்ள தனியாவர் வங்கிகளின் வரிசையில் கோட்டக் - ஐஎன்ஜி இணைந்த வங்கி நான்காவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிறுவனத்தின் மதிப்பீடு விலை நிலவரங்களின் சராசரியை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது எனவும், ஐஎன்ஜி வைஸ்யாவில் 1000 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு கோட்டக்கின் 725 பங்குகள் வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியா முழுவதும் 1214 வங்கி கிளைகளை கொண்டு இந்த இணைந்த வங்கி செயல்படும் என்று கூறப்படுகிறது.
 
கோட்டக் வங்கி தற்போது ரீடெயில் தொழிலுக்கான வங்கிக்கடன்களை அளிப்பதில் சிரப்பாக செயல்பட்டு வருகிறது, அதேபோல் ஐஎன்ஜிவைஸ்யா எஸ்எம்இக்களுக்கு கடன் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த இணைப்பு இன்னமும் மக்களை சென்றடைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இணைப்பு தற்போது ஆர்பிஐயின் அனுமதி மற்ற நெறிமுறை அனுமதிகளுக்காக காத்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close