Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 55 புள்ளிகள் உயர்வு!

 
இன்றைய பங்கு சந்தையில் விலை அதிகரித்த பங்குகள் 
பிஹெச்இஎல்  4.83%, 
பிஎன்பி 2.99%, 
ஹெச்யூஎல் 2.64%, 
ஹின்டால்கோ 2.04% 
ஹெச்சிஎல் டெக் 1.91% 
 
விலை குறைந்த பங்குகள்
டி எல் எஃப் 2.56% 
பாரதி ஏர்டெல் 2.02%
அம்புஜா சிமெண்ட்ஸ் 1.51%, 
க்ராஸிம் 1.49%, 
டாடா ஸ்டீல் 1.30% 
 
இன்று காலை இறக்கத்தில் துவங்கிய இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தது. அதாவது சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து 28438 என்ற நிலையிலும், நிஃப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 8498 என்ற நிலையிலும் சந்தை முடிவடைந்தது.
 
இன்றைய வர்த்தகத்தில் ஐடி, ஹெல்த் கேர்,  எஃப் எம்சி ஜி, மிட்கேப் ஆகிய துறைகள் அதிக வளர்ச்சியுடன் வர்த்தகமானது.
 
எஃப் அண்ட் ஒ எக்ஸ்பைரி என்பதால் சந்தை ஒருவிதமான மந்த நிலையிலே வர்த்தகமானது.
மேலும் டிசம்பர் 2ம் தேதி ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் நிதியமைச்சர் திங்கள் கிழமை ஆர்பிஐ கவர்னரை சந்திக்க உள்ளர். அடுத்தது இந்தியாவின் ஜூலை - செப்டம்பர் காலாண்டு ஜிடிபி 5.3 சதவிகிதமாக இருக்கும் என மூடிஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலைவாக ஏற்றத்தில் இருந்த போது மந்தநிலையே காணப்பட்டது. 
 
தங்கத்தின் விலை 109 ரூபாய் குறைந்து 26,253 ரூபாய்க்கும், கச்சா எண்ணெய் விலை 82 ரூபாய் குறைந்து 4,497 ரூபாய்க்கும் வர்த்தகமானது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61.86 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
2.30 மணி நிலவரம்:

காலையில் இறக்கத்தில் வர்த்தகமான சந்தை தற்போது ஏற்றம் கண்டு வருகிறது. சென்செக்ஸ் 29.08 புள்ளிகள் அதிகரித்து 28,415.27 என்ற அளவிலும். நிஃப்டி 12.45 புள்ளிகள் அதிகரித்து 8,488.20 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிறது.

தங்கத்தின் விலை 126 ரூபாய் குறைந்து 26,236க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 89 ரூபாய் குறைந்து 4,490க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு 61.87 ரூபாயாக உள்ளது.

ஹின்டால்கோ, பிஎன்பி, பவர்கிரிட் கார்ப், பிபிசிஎல் ஆகிய பங்குகள் தொடர்ந்து இன்று ஏற்றம் கண்டு வருகிறது. ஜீ என்டர்டெயின்மென்ட், பார்தி ஏர்டெல்,டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் சரிவில் வர்த்தகம் ஆகிறது. 
 
12.30 மணி நிலவரம்

தற்போது பங்கு சந்தை சற்று இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸை பொறுத்த வரை 30.61 புள்ளிகள் குறைந்து 28,355.58 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 7.35 புள்ளிகள் குறைந்து 8,468 என்ற அளவில் வர்த்தகமாகிறது.

தங்கத்தின் விலை 0.33% சரிந்து 26,274 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 1.09% சரிந்து 4,529 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு 61.87 ரூபாயாக வர்த்தகமாகிறது. ஹின்டால்கோ, பிஎன்பி, பவர்கிரிட் கார்ப் ஆகிய பங்குகள் விலை அதிகரித்தும். ஜி என்டர்டெயின்மென்ட், பார்தி ஏர்டெல், ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகிறது.

 

10.30 மணி நிலவரம்.

 

 

இறக்கதில் இந்திய பங்குச் சந்தைகள்!

 

 
ஏற்றத்தில் துவங்கிய இந்திய சந்தைகள் சிறிய இறக்கம் காண ஆரம்பித்துள்ளது. இன்று காலை(27.11.2014) 10.30 மணியளவில் சென்செக்ஸ் 22 புள்ளிகள் சரிந்து 28363 என்ற நிலையிலும், நிஃப்டி 7 புள்ளிகள் சரிந்து 8468 என்ற நிலையிலும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. 
 
சிக்ரெட் விற்பனை விதித்த கட்டுபட்டினால்  விலை உயர்ந்த ஐடிசி பங்கின் விலை இன்று சரிய ஆரம்பித்துள்ளது. மேலும் பார்தி ஏர்டெல், டிஎல் எஃப், ஜீண்டால் ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகளின் விலையும் சரிய ஆரம்பித்துள்ளது. 
அதே நேரத்தில் ஹெச் யூஎல்,  ஏசியன் பெயின்ட்ஸ், பிபிசிஎல், ஜிண்டால்கோ, பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய பங்குகளை விலை உயர ஆரம்பித்துள்ளது. 
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் 61.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close