Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2030ல் நிஃப்டி 125000!

  2030ல் நிஃப்டி 125000!

 
பங்குச் சந்தை முதலீட்டாளரான ஜுன்ஜுன்வாலா பங்குச் சந்தை முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் ஆண்டுக்கு 16 சதவிகிதம் என்ற வளர்ச்சியில் இருந்தால் 2030ம் ஆண்டுக்குள் நிஃப்டி 125000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகும் என்று கூறியுள்ளார். 
 
செவ்வாய்க்கிழமையன்று 8537 புள்ளிகள் என்ற அளவில் முடிந்த நிஃப்டி 203ம் ஆண்டுக்குள் 13 மடங்கு வளர்ச்சியடைந்து 125000 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
 
கடந்த 10 வருடங்களில் நிஃப்டி 10 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், அடுத்த 10 வடங்களில் 10 முதல் 12 மடங்கு அதிகரிக்கும் போது இது சாத்தியம் என்றார். இதற்கு முன் இவர் டிசம்பர் 2ம் தேதி ஆர்பிஐ கவர்னர் ரகுராம்ராஜன் வட்டிவிகிதத்தை குறைக்க மாட்டார் என்றும் கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுதவிர கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு குறைந்து வர்த்தகமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.இவரது கணிப்பு சில சமயங்களில் சரியாக நடப்பதால் இதுவும் நடந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை என்று சில முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close