இறக்கத்தில் முடிந்த பங்குச் சந்தை!
3.30 மணி நிலவரம்
இன்று சந்தையின் போக்கு தொடக்கத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமானாலும், இறக்கத்துடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 104.72 புள்ளிகள் குறைந்து 28458.10 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 26.10 புள்ளிகள் குறைந்து 8538.30 புள்ளிகளிலும் முடிந்திருக்கின்றன.
பங்குச் சந்தை முடியும் போது 10 கிராம் தங்கத்தின் விலை 60 ரூபாய் சரிந்து 26,576 ருபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 13 ரூபாய் குறைந்து 4,123 ரூபாய்க்கும் வர்த்தகமாகின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து 61.87 ருபாய்க்கு வர்த்தகமாகியது.
டாப் 5 ஏற்றப்பங்குகள்:
டி எல் எஃப் 4.76%.
அம்புஜா சிமெண்ட்ஸ் 3.00%
பி என் பி 2.42%
எம் & எம் 2.29%
ஐ டி சி 2.14%
டாப் 5 இறக்கப் பங்குகள்:
விப்ரோ 2.34%
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 2.30%
டெக் மஹிந்திரா 2.28%
பி பி சி எல் 2.27%
டி சி எஸ் 2.24%
11.00 மணி நிலவரம்
இந்திய பங்கு சந்தைகள் இன்று சீராக ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 33.81 புள்ளிகள் அதிகரித்து 28596.63 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 9.75 புள்ளிகள் அதிகரித்து 85774.15 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 116 ரூபாய் சரிந்து 26,520 ருபாய்களுக்கு வர்த்தகமாகின்றன. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 16 ரூபாய் குறைந்து 4,120 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து 61.86 ரூபாயாக உள்ளது
விலை அதிகரித்த பங்குகள்:
அம்புஜா சிமெண்ட்ஸ் 2.67%
அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ்1.88%
செசா ஸ்டெர்லைட் 1.79%
பி என் பி 1.46%
ஏ சி சி 1.43%
விலை குறைந்த பங்குகள்
இன்றைய பங்கு சந்தையில் இறக்கத்தில் வர்த்தகமாகும் பங்குகள். இதில் சிடிஎஸ், விப்ரோ ஆகிய பங்குகள் தொடக்கத்திலிருந்து சரிவில் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.
டி சி எஸ் 1.70%
விப்ரோ 1.65%
ஜிண்டால் ஸ்டீல்ஸ் 1.60%
ஹெச் சி எல் டெக் 1.47%
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 1.20%
டாடா மோட்டார்ஸ் 0.63%
9.30 மணி நிலவரம்