Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளது!

 இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளது!

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக் கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக டிசம்பர் 9ம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
 
சர்வதேச அளவில் ஊழல் அதிகமாக உள்ள நாடுகளில் சோமாலியா, சூடான், வட கொரியா ஆகிய நாடுகள் அதிகம் ஊழல் உள்ள நாடுகளாக உள்ளன. ட்ரான்ஸ்ப்ரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கரப்ஷன் பெர்ஷப்ஸன் இன்டெக்ஸ் (CPI) தரவரிசையில் இந்தியா 85வது இடத்தை பிடித்துள்ளது. இதில் இந்தியாவின் அண்டைநாடுகளான பூடான் 30வது இடத்திலும், பாகிஸ்தான், இங்கை முறையே 126 மற்றும் 85வது இடத்தில் உள்ளன.
 
இந்த அமைப்பின் அறிக்கைப்படி 0 முதல் 100 வரை மதிப்பெண்களை வழங்கியுள்ளது. இதில் 0-வில் இருக்கும் நாடு அதிக ஊழல் நிறைந்த நாடு என்றும். 100ல் இருக்கும் நாடு ஊழல் இல்லாத நாடு என்று கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில் டென்மார்க் 92 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் ஊழலே குறைவாக உள்ல நாடாக உள்ளது. இந்தியா இந்த தரவரிசையில் 38 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. சென்ற வருடம் 36 மதிப்பெண்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் ஊழல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close