சந்தை செய்திகள்
சந்தை செய்திகள்
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளி அன்று ரூ 864.96 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ 323.41 கோடி பங்குகளை வாங்கியுள்ளன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இன்று 19 காசுகள் குறைந்து, ரூ 62.48 என்ற விலையில் வர்த்தகமாகிறது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நுகர்பொருள் துறையைச் சேர்ந்த பஜாஜ் கார்ப்பரேஷன், கிளாக்சோ ஸ்மித்கிளைன் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமது நிகர வருவாயில் 20% வரை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளன.
கோல் இந்தியா நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1,000 மெகா வாட் உற்பத்தி திறனில் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை நிறுவுவதற்காக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
நிறுவனங்களுக்கு வழங்கிய ஊக்குவிப்பு சலுகைகள் மற்றும் வரிச்சலுகைகளால் சென்ற நிதிஆண்டில் (2013-14) மத்திய அரசின் வருவாய் இழப்பு 10% அதிகரித்து ரூ 1.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2012-13 ஆம் நிதியாண்டில் இந்த வகையில் ஏற்பட்ட இழப்பு ரூ 9,636 கோடியாக இருந்தது.