Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்மார்ட்போன் விற்பனை 20% அதிகரிப்பு:

 ஸ்மார்ட்போன் விற்பனை 20% அதிகரிப்பு


இன்று ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் வளர்ச்சி பல மடங்காக இருந்து வருகிறது.
 
டச் ஸ்கிரீன், உடையாத திரை அமைப்பு, அதிக மெமரி திறன். கிட்டத்தட்ட கணினிக்கு இணையான போன்கள் என அனைத்து விதமான போன்களும் இன்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. முன்னனி நிறுவனங்கள் துவங்கி சிறிய மொபைல் நிறுவனங்கள் வரை அனைத்துமே இன்று தனது விற்பனையை அதிகரித்துள்ளன.

கார்ட்னர் அமைப்பின் அறிக்கையின்படி கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த செப்டம்பர் காலாண்டில் 20 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எண்ணிக்கையில் 301 மில்லியன் செல்போன்கள் என்ற அளவில் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மற்ற பிராண்டுகளில் விற்பனை அதிகரித்திருந்தாலும் சாம்சங் செல்போனின் விற்பனை என்பது சென்ற செப்டம்பர் காலாண்டை காட்டிலும் தற்போது குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆண்டில் தான் ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6+ வெளியிடப்பட்டது. சீனாவின் ஆப்பிள் எனப்படும் ஸியோமி போன்கள் அதிக அளவில் விற்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close