Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2014ல் கூகுளில் எது அதிகம் தேடப்பட்டது!

 2014ல் கூகுளில் எது அதிகம் தேடப்பட்டது!


ஒரு விஷயம் தெரிய வேண்டும் ஒரு செய்தி தெரிய வேண்டும் என்றால் இணையதளத்தில் உள்ளவர்களின் விரல் தானாக கூகுள் இணையதளத்திற்கு சென்று விடுகிறது. அந்த அளவுக்கு தேடுதலில் முன்னேறியுள்ள கூகுள் ஆண்டுதோறும் எந்த விஷயம் அதிகம் தேடப்பட்டது என்ற தகவலை அளிக்கும். அப்படி இந்த வருடமும் வெளியிட்டுள்ளது கூகுள்.

இதில் உலக அளவில் ராபின் வில்லியம்ஸ் மரணம், உலகக் கோப்பை கால்பந்து, ஐஸ் பக்கெட் சேலஜ்ச் மற்றும் எபோலா ஆகியவை அதிகமாக தேடப்பட்டுள்ளன.
 
இந்தியாவை பொறுத்தமட்டில் மக்களவை தேர்தல், நரேந்திர மோடி, ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஐஆர்சிடிசி, பிஎன்ஆர் நிலவரம் எஸ்பிஐ நெட்பேங்கிங் ஆகியவை அதிகமாக தேடப்பட்டுள்ளன.

இது தவிர உலக அளவில் சில விஷயங்கள் பிரபலாமாக தேடப்பட்டுள்ளன. கடலில் விழுந்த மலேசிய விமானம் 370-ஐ இணையதளத்தில் அதிகமானபேர் தேடியுள்ளனர்.

இந்தியாவில் 2014ல் அதிகமாக தேடப்பட்ட நிகழ்வுகள்:

1.தேர்தல் 2014
2. பிபா 2014(உலகக் கோப்பை கால்பந்து)
3.ஐபோன் 6
4.கேட் 2015(GATE 2015)
5.நரேந்திர மோடி
6.ஐபிஎல்2014
7.ராகினி எம்எம்எஸ் 2
8.கிக்
9.ஜெய்ஹோ
10.ஹாப்பி நியூ இயர்

தொழில்நுட்ப உலகில் அதிகம் தேடப்பட்ட பொருட்கள்:

1.மோட்டோ ஜி 
2.ஐபோன் 6
3.சாம்சங் கேலக்ஸி எஸ் 5
4.மோட்டோ இ
5.நோக்கியா எக்ஸ்
6.நோக்கியா எக்ஸ்.எல்
7.ஸியோமி எம்ஐ3
8.சாம்சங் கேலக்ஸி கிராண்ட்
9.மோட்டோ எக்ஸ்
10.ஐபோன் 5எஸ்

இந்த வருடம் பல விஷயங்கள் பரபரப்புக்கு உள்ளாகின. தேர்தலில் நரேந்திய மோடியின் வெற்றிக்கு இணையதளத்தின் பங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.இந்த விஷயங்களை பார்க்கும் போது இது நாம் அதிகம் தேடும் விஷயமாக உள்ளதே என்பது போல் தோன்றினால் நீங்கள் இன்றைய ட்ரெண்டிங்கில் இருக்கின்றீர்கள் என்கிறார்கள் இணையதளவாசிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close