பங்கு பிரிப்பில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் ஜேகே டயர்
பங்கு பிரிப்பில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் ஜேகே டயர்
பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் ஜேகே டயர்ஸ் ஆகிய பங்குகள் பிரிக்கப்பட்ட பிறகு எட்டு சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.
ஜேகே டயர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் எட்டு சதவிகிதம் உயர்ந்து 129 ரூபாய்க்கு வர்த்தகமானது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பங்குகள் நான்கு சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 225க்கு வர்த்தகமானது.
இந்த இரண்டு நிறுவனங்களும் பத்து ரூபாய் மதிப்புள்ள பங்குகளை இரண்டு ரூபாய் மதிப்புள்ள பங்குகளாக பிரித்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்கள் பதிவு தேதியாக 19 டிசம்பர் 2014ஐ அறிவித்துள்ளது.
10 ரூபாய் இருந்த பங்கை தற்போது இரண்டு ரூபாய் மதிப்புள்ள பங்குகளாக பிரித்துள்ளதால் 19 டிசம்பர் அன்று தான் பங்குதாரர்கள் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.