Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம்


இன்று மட்டும் தேசிய பங்குச் சந்தை 0.81 சதவிகிதமும் மற்றும் மும்பை பங்குச் சந்தை 0.90 சதவிகிதமும் ஏற்றமடைந்து வர்த்தகமானது. நேற்றைய முடிவில் இந்திய சந்தைகள் ஒரு சதவிகித ஏற்றம் கண்டு வர்த்தகம் முடிவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 245.27 புள்ளிகள் உயர்ந்து 27371.84 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 65.90 புள்ளிகள் உயர்ந்து 8225.20 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை 163 ரூபாய் அதிகரித்து 26,978 ரூபாய்க்கும், கச்சா எண்ணெயின் விலை 27 ரூபாய் குறைந்து 3,540 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.16 ரூபாயாக உள்ளது

அமெரிக்க பங்குச் சந்தைகள் மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாயின். ஆசிய பங்குச் சந்தைகளில் அதிகபட்சமாக நிக்கி 2.33 சதவிகிதம் வர்த்தகமாயின. எஸ் இ டி காம்போசைட் 0.16 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமானது.


ஏற்றப் பங்குகள்

பவர் கிரிட் கார்ப் - 3.19%
ஹிண்டால்கோ -3.17%
ஐசிஐசிஐ பேங்க் -2.96%
டாடா பவர் -2.46%
விப்ரோ - 2.34%


இறக்கப் பங்குகள்

டி எல் எஃப் -2.87%
ஐடிசி -1.61%
ஏசியன் பெயிண்ட்ஸ் - 1.60%
பாரதி ஏர்டெல் -1.46%

ஹெச் யூ எல் - 1.41%

 

2.00 மணி நிலவரம்

உலக பங்குச் சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்ற நிலையில், வார இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தோடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. சற்று முன் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சீரான ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 307.15 புள்ளிகள் உயர்ந்து 27433.78 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 87.30 புள்ளிகள் உயர்ந்து 8246.60 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 103 ரூபாய் அதிகரித்து 26,918 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 79 ரூபாய் குறைந்து 3,488 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.05 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

மும்பை பங்குச் சந்தையில் 2,812 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 1,654 பங்குகள் ஏற்றத்திலும், 1,038 பங்குகள் இறக்கத்திலும், 120 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 39 பங்குகள் ஏற்றத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.


ஏற்றப் பங்குகள்:

கோல் இந்தியா                         -2.86%
ஹிண்டால்கோ                       -2.78%
ரிலையன்ஸ்                            -2.69%
டாடா பவர்                                 - 2.64%
ஐசிஐசிஐ பேங்க்                       -2.59%

இறக்கப் பங்குகள்:

டி எல் எஃப்                              -3.86%
பார்தி ஏர்டெல்                       -1.87%
ஐடிசி                                         -1.09%
ஜிண்டால் ஸ்டீல்                -0.87%
கோட்டக் மஹிந்திரா        - 0.75%
 

 

12.30 மணி நிலவரம்

அமெரிக்க பங்குச் சந்தைகள் இரண்டு சதவிகிதங்களுக்கும் அதிகமாக ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய பங்குச் சந்தைகள் நிக்கி 2.33 சதவிகிதம் ஏற்றத்திலும், குறைந்த பட்சமாக ஜகர்தா காம்போசைட் 0.71 சதவிகிதமும் ஏற்றத்தில் வர்த்தகமகின்றன. எஸ்இடி காம்போசைட் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாவது கவனிக்கத்தக்கது.

இந்திய சந்தைகளில் மூலதன பொருட்கள், ஆட்டோமொபைல், மெட்டல், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டிருக்கும் நிலையிலும், எண்ணெய் மற்றும் காஸ் துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 318.11 புள்ளிகள் உயர்ந்து 27444.68 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 91.40 புள்ளிகள் உயர்ந்து 8250.70 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 130 ரூபாய் அதிகரித்து 26,945 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 71 ரூபாய் குறைந்து 3,496 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.06 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்
:

ஹிண்டால்கோ                         -2.78%
கோல் இந்தியா                          -2.75%
ரிலையன்ஸ்                              -2.57%
சேசா ஸ்டெர்லைட்                 -2.53%
ஐசிஐசிஐ பேங்க்                        -2.34%

இறக்கப் பங்குகள்:

டி எல் எஃப்                                   -4.08%
பார்தி ஏர்டெல்                           -2.33%
ஐடிசி                                             -0.88%
ஹெச் யூ எல்                            -0.84%
கோட்டக் மஹிந்திரா            - 0.80%

 

 11.00 மணி நிலவரம்

இறக்கங்களை சரி கட்டும் இந்திய பங்குச் சந்தைகள்

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் 28,500 புள்ளிகளையும், நிஃப்டி 8,500 புள்ளிகளையும் தாண்டி வர்த்தகமாகியது. அதன் பின் கடந்த இரண்டு வாரங்களாக இந்திய சந்தைகள் சுமார் ஐந்து சதவிகித இறக்கத்தை சந்தித்திருந்தாலும், அந்த இறக்கங்களை சரிகட்டும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு நாளுக்கு  ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமாக ஏற்றம் கண்டு வர்த்தகமாகிறது. 

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் தற்போது 311.24 புள்ளிகள் உயர்ந்து 27437.81 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 87.85 புள்ளிகள் உயர்ந்து 8247.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 82 ரூபாய் அதிகரித்து 26,897 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 54 ரூபாய் குறைந்து 3,513 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.05 ரூபாயாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் 1,428 பங்குகள் ஏற்றத்திலும், 398 பங்குகள் இறக்கத்திலும், 53 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் 40 பங்குகள் ஏற்றத்திலும், எட்டு பங்குகள் இறக்கத்திலும், இரண்டு பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன

விலை அதிகரித்த பங்குகள்:

பி ஹெச் இ எல் - 2.78%
சேசா ஸ்டெர்லைட் -2.72%
எம் அண்ட் எம் -2.70%
ஜீ எண்டர்டெயின்மென்ட்- 2.67%
கோல் இந்தியா -2.45%

விலை குறைந்த பங்குகள்:

பாரதி ஏர்டெல் -1.74%
டி எல் எஃப் -1.66%
ஹெச் யூ எல் -0.61%
ஜிண்டால் ஸ்டீல் -0.51%
கோட்டக் மஹிந்திரா - 0.34%
 
காலை 9:30 மணி நிலவரம்:
இன்றைய நாளின் துவக்கத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. இந்த வார ஆரம்பத்தில் இறக்கத்தை சந்தித்த சந்தைகள் நேற்றும், இன்றும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. 
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 251.88 புள்ளிகள் அதிகரித்து 27378.45 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 72.70 புள்ளிகள் அதிகரித்து 8232.00   புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
இந்த ஏற்றத்திற்கு அரசின் புதிய சீர்திருத்தங்களும், ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்த அரசு எடுத்திருக்கும் செயல்பாடுகளுமே காரணமாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய நாளில் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 0.5 சதவிகிதம் குறைந்து 26,815 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 4 சதவிகிதம் விலை குறைந்து 3,567 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.04 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்து வர்த்தகமான பங்குகள்:
 
செஸா ஸ்டெர்லைட் 3.29 
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.68
ஹச்.டி.எஃப்.சி 1.68
ஹிண்டால்கோ 1.60
எம்&எம் 1.54
 
விலை குறைந்து வர்த்தகமான பங்குகள்:
 
பாரதி ஏர்டெல் -1.34 
ஐடிசி -0.41
கெயில் -0.32
கெய்ர்ன் இந்தியா -0.13
பவர் கிரிட் கார்ப் -0.08

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close