Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் குஜராத்தில் ஹோண்டா நிறுவனம் முதலீடு

 மீண்டும் குஜராத்தில் ஹோண்டா நிறுவனம் முதலீடு


ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் குஜராத்தில் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க அம்மாநில அரசை அணுகியுள்ளது. ரூ.1,000 கோடி முதலீட்டில் இந்த கார் உற்பத்தி தொழிற்சாலையை விதல்பூர் என்னுமிடத்தில் அமைக்க உள்ளது. அகமதாபாத்திலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த விதல்பூர் கிராமம் .

ஹோண்டா நிறுவனம் அளித்த திட்டம் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது எனவும், விரைவில் மாநில அமைச்சரவை இதற்கான ஒப்புதலை அளிக்கும் எனவும் தெரிகிறது.
 
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை இந்த கிராமத்தில் நிறுவுவதாக அறிவித்திருந்தது. குஜராத்தில் ஹோண்டா நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய முதலீடு ஆகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close