Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் மூழ்கிய இந்திய சந்தைகள்!


3.30 மணி நிலவரம்


மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 854.86 புள்ளிகள் குறைந்து 26987.46 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 251.05 புள்ளிகள் குறைந்து 8127.35 புள்ளிகளாக வர்த்தகம் முடிவுற்றது.

10 கிராம் தங்கத்தின் விலை 257 ரூபாய் அதிகரித்து 27,295 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 102 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,113 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.51 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

இந்திய சந்தையில் ஆட்டோமொபைல், வங்கி, மூலதன பொருட்கள் ஹெல்த் கேர், ஆகிய துறை சார்ந்த பங்குகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமானது. ஏற்றத்தில் வர்த்தகமானதாக எந்த துறையையும் குறிப்பிட்டு கூற இயலாத அளவிற்கு சரிவு பரவலாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 2,930 பங்குகள் வர்த்தகமாயின. இதில் 613 பங்குகள் ஏற்றத்திலும், 2,252 பங்குகள் இறக்கத்திலும், 65 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. பகல் 12.30 மணியிலிருந்து நிஃப்டியில் இரண்டு பங்குகள் மட்டும் ஏற்றத்திலும், மற்ற 48 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உலக அளவில் சந்தைகளின் இறக்கங்கள், மந்த நிலை மேலும் தொடர்கிறது. ஷாங்காய் காம்போஸைட் மட்டும் 0.07 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமானது. அதிக பட்சமாக எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டிநிக்கி 3.11%, தய்வான் 2.50% இறக்கத்தைல் வர்த்தகமானது.

ஏற்றப் பங்குகள்

ஹெச் யூ எல்                   1.89

இறக்கப் பங்குகள் :

ஜிண்டல் ஸ்டீல்              -6.26
ஓ என் ஜி சி                       -5.66
சேசா ஸ்டெர்லைட்        -4.89
டாடா ஸ்டீல்                   -4.85
ஹெச் டி எஃப் சி              -4.71


2.00 மணி நிலவரம் 


மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 585.56 புள்ளிகள் குறைந்து 27256.76 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 169.35 புள்ளிகள் குறைந்து 8209.05 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 69 ரூபாய் அதிகரித்து 27,107 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 72 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,143 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.33 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 

இந்திய சந்தைகளின் சரிவிற்கு அந்நிய நிகர முதலீட்டாளர்களின் முதலீடு குறைவு, மூன்றாம் காலாண்டில் நிறுவனங்கள் எதிர்பார்த்த அல்லது நல்ல முன்னேற்றம் காணாதது, கச்சா எண்ணெயில் விலை நிலைகொள்ளாமல் சரிவிலேயே இருப்பது, விலைவாசி குறைந்த போதிலும் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கலை குறைக்காமல் இருப்பது போன்றவைகள் இந்திய சந்தைகளை பெரிதும் பாதித்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சந்தை நிலவரப்படி இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 1.99 ஆக இருக்கிறது. மும்பை பங்குச் சந்தைகளில் வழக்கத்தை விட குறிவான பங்குகளே வர்த்தகமாகி இருக்கின்றன. சற்று முன் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகளும் இறக்கத்திலும், தேக்க நிலையில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.

ஏற்றப் பங்குகள் :
ஹெச் யூ எல் 2.29%
பி பி சி எல் 0.21%
ஏசியன் பெயிண்ட்ஸ் 0.19%
எம் அண்ட் எம் 0.09%

இறக்கப் பங்குகள் :

ஜிண்டால் ஸ்டீல் -3.78%
ஓ என் ஜி சி -3.58% 
டாடா மோட்டார்ஸ் -3.36%
என் எம் டி சி -3.35%

டாடா ஸ்டீல் -3.31%
 
12.30 மணி நிலவரம்:

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 577.70 புள்ளிகள் குறைந்து 27264.62 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 168.65 புள்ளிகள் குறைந்து 8209.75 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 126 ரூபாய் அதிகரித்து 27,164 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை 32 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,183 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.32 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

இந்திய சந்தையில் ஆட்டோமொபைல், வங்கி, ஹெல்த் கேர், மெட்டல், மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஏற்றத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட துறையின் பங்குகளும் இல்லை, மாறாக தேக்க நிலை நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தைகள் தற்போது தோராயமாக இரண்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன என்பதும் கவனத்திற்குரியது.

மும்பை பங்குச் சந்தையில் 2,612 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 605 பங்குகள் ஏற்றத்திலும், 1,941 பங்குகள் இறக்கத்திலும், 66 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் ஹிந்துநில்விஆர் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய பங்குகள் மட்டும் ஏற்றத்திலும், மற்ற 48 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :
ஹெச் யூ எல் 0.06%
பி பி சி எல் 0.14%

இறக்கப் பங்குகள் :
ஜிண்டால் ஸ்டீல் -4.21%
ஓ என் ஜி சி -3.87%
டாடா ஸ்டீல் -3.74%
என் எம் டி சி -3.66%
டாடா மோட்டார்ஸ் -3.43%
 
11.00 மணி நிலவரம்

சரிவில் இந்திய சந்தைகள்

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 561.80 புள்ளிகள் குறைந்து 27280.52 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 167.00 புள்ளிகள் குறைந்து 8211.40 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 57 ரூபாய் அதிகரித்து 27,095 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2576 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2755 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை 19 ரூபாய் குறைந்து பேரல் ஒன்றுக்கு 3,196 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை 6.23 % மேலும் சரிந்து 53.11 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூ. டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 5.30 % சரிந்து 50.04 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.35 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

உலக அளவில் அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தையில் அதிகபட்சமாக நிக்கி 2.99 %, தைய்வான் 2.30% இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் 2,280 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 527 பங்குகள் ஏற்றத்திலும், 1,710 பங்குகள் இறக்கத்திலும், 43 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் இரண்டு பங்குகள் ஏற்றத்திலும், 48 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள் :

ஏசியன் பெயிண்ட்ஸ் 0.20%
ஹெச் யூ எல் 0.06%

இறக்கப் பங்குகள் :

ஓ என் ஜி சி -3.55 
டாடா மோட்டார்ஸ் -3.50
டாடா ஸ்டீல் -3.46
என் எம் டி சி -3.39
ஜிண்டால் ஸ்டீல் -3.25
 
 
9.30 மணி பஙகுச் சந்தை நிலவரம்:
 
இன்றைய நாளின் துவக்கத்திலிருந்தே இந்திய சந்தைகள் சரிவை சந்தித்தன. காலை 9:30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 410 புள்ளிகள் சரிந்து 27432 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 111 புள்ளிகள் சரிந்து 8266 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் சந்தையில் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிக அளவில் குறைந்ததும், ஆசிய சந்தைகள் வீழ்ச்சியில் கானப்பட்டதும் இந்திய சந்தைகளில் இறக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 308 ரூபாய் அதிகரித்து 27,038 ரூபாய்க்கும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 176 ரூபாய் சரிந்து 3,215 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. நைமெக்ஸ் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 50 டாலருக்கு வர்த்தகமாகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
பிபிசிஎல் 0.91%
ஹச்யூஎல் 0.36%
 
விலை குறைந்த பங்குகள்:
 
டாடா மோட்டார்ஸ் 3.07%
செஸா ஸ்டெர்லைட் 2.68%
கெய்ர்ன் இந்தியா 2.66%
கிராஸிம் 2.13%
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close