Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பரில் எஃப் ஐஐக்கள் பங்கு முதலீடு குறைந்தது

அந்நிய நிதி முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐக்கள்), 2014 டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.2,132 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

இது இதற்கு முந்தைய 10 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச முதலீடு ஆகும். இதற்கு முன், குறைந்தபட்சமாக பிப்ரவரி மாதத்தில் எஃப்ஐஐக்கள் நிகர பங்கு முதலீடு ரூ.1,404 கோடியாக இருந்தது. 

மத்திய அரசு அவசர சட்டத்தின் மூலம் காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. இருந்தாலும், லாப நோக்கில் பங்குகளை எஃப்ஐஐக்கள் விற்றதால் முதலீடு குறைந்துள்ளது. 
 
இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், நடப்பு ஜனவரி மாதத்தில் எஃப் ஐஐக்கள் பங்குகளில் மீண்டும் அதிகமாக முதலீடு செய்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close