Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

15 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் மத்திய பட்ஜெட்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமையில் இந்திய நாட்டின் பட்ஜெட் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இத்தகவலை மத்தியில் ஆளும் பாஜக அரசானது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

வழக்கமாக நிதி ஆண்டின் இறுதி நாள் அன்றோ அல்லது தொடங்க இருக்கும் நிதி ஆண்டின் முதல் நாள் அன்றோதான் பட்ஜெட் கூட்டமானது நடத்தப்பட்டு வந்தது.

அதாவது மார்ச் 31-ம் நாள் அல்லது ஏப்ரல் முதல் நாள். இந்த நாட்களும் இதுவரை வார நாட்களாகவே இருந்துள்ளன. ஆனால் வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரானது பிப்ரவரி 28-ம் தேதி சனிக்கிழமையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக பிப்.26-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த 1999-ம் வருடம் யஷ்வந்த் சின்ஹா நிதி அமைச்சராக இருந்தபோது சனிக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் அவர் காலை 11 மணிக்கு பட்ஜெட் தக்கலை ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

மோடி அரசின் முதல் பட்ஜெட் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெறவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது தாக்கல் செய்ய இருக்கும் இரண்டாவது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பானது மக்கள் மத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close