Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2014-15ல் இந்தியாவின் ஜிடிபி என்ன?

இந்தியாவில் தற்போது பொருளாதார வளர்ச்சியை கணக்கிட உதவும் ஜிடிபியின் அடிப்படை வருடம் மாற்றியமைக்கப்பட்டது. 2004-05 என இருந்த அடிப்படை வருடம் 2011-12 ஆக மாற்றப்பட்டது. 
 
இதன் மூலம் நாட்டின் ஜிடிபி ஒரே நாளில் 4.7 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாக அதிகரித்தது. இதன்படி தற்போது 2014-15 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன. 
 
கடந்த காலாண்டில் வளர்ச்சி என்பது 7.5 சதவிகிதமாக இருந்துள்லது. இதைவிட அதிகமான வளர்ச்சியே அடுத்த காலாண்டிலும் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 2014-15ம் நிதியாண்டில் மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை வருடத்தின் கணக்குபடி  இந்தியாவின் ஜிடிபி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்லது.
 
ஏற்கெனவே ஐஎம்எஃப் 2016ல் இந்தியாவின் ஜிடிபி சீனாவை முந்தும் என கணக்கிடப்பட்டிருந்தது. தற்போதுள்ள நிலையில் 2015ம் ஆண்டிலேயே இது சாத்தியப்படும் என்று கணிக்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close