இறக்கத்தில் இந்திய சந்தைகள் : 12 மணி நிலவரம்
12.00 மணி நிலவரம்:
.jpeg)
ஆட்டோ, கேப்பிட்டல் கூட்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள், ஹெல்த்கேர், ஐடி துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் ஏற்றத்திலும், பேங்க் நிஃப்டி, மெட்டல், ஆயில் அண்டு கேஸ் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
/
இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 16 புள்ளிகள் அதிகரித்து 28549 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 8643 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 191 ரூபாய் குறைந்து 26,665 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 92 ரூபாய் குறைந்து 3,075 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.38 ரூபாயாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு குறைந்து வர்த்தகமாகிறது. மேலும் பங்குச் சந்தைகளும் நிலையான ஏற்றத்தில் தான் வர்த்தகமாகின்றன. இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1105 பங்குகள் விலை அதிகரித்தும், 582 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது.
விலை அதிகரித்த பங்குகள்:
ஜி என்டர்டெயிண்மென்ட் 3.27
அம்புஜா சிமெண்ட்ஸ் 2.25
மாருதி சுசுகி 2.12
ஹிண்டால்கோ 2.10
ஹிரோ மோட்டோ கார்ப் 1.97
விலை குறைந்த பங்குகள்:
பாரதி ஏர்டெல் -1.29
ஏசியன் பெயிண்ட்ஸ் -0.86
எஸ்பிஐ -0.79
பிஹச் இஎல் -0.72
ஐடிசி -0.71