Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ்! நிஃப்டி!

 

3.30 மணி நிலவரம்
ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்...
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் தற்போது 472.25 புள்ளிகள் அதிகரித்து 29218.90 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  166.80 புள்ளிகள் அதிகரித்து 8850.65 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.
10 கிராம் தங்கத்தின் விலை 106 ரூபாய் குறைந்து 26,110 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 14 ரூபாய் அதிகரித்து 3,069 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.77 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
வர்த்தக நேர முடிவில் மூலதன பொருட்கள், வங்கி, ஆட்டோமொபைல் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. எஃப்எம்சிஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.
இந்திய சந்தைகளின் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸில் 1,796 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1,081 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 119 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 47 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், மூன்று நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்
டாடா பவர்ஸ் 5.56%
பேங்க் ஆஃப் பரோடா 5.43%
லார்சன் 5.18%
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் 5.12%
ஜிண்டால் ஸ்டீல் 4.91%

 

இறக்கப் பங்குகள்
 
கெயில் -0.92
ஐடிசி -0.66
விப்ரோ -0.46
பிபிசிஎல் -0.20
கோட்டக் மஹிந்திரா -0.10
 
*****

 

இன்றைய நாளின் துவக்கத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. காலை 9:45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 172 புள்ளிகள் அதிகரித்து 28919 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து 8744 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்த்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 93 ரூபாய் அதிகரித்து  26,216 ரூபாய்க்கும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 62 ரூபாய் குறைந்து  3,055 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.77 ரூபாயாக உள்ளது. 
 
அமெரிக்க டாலரின் மதிப்பு ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் அமெரிக்க பெடரல் வங்கி இந்த வருட மத்தியில் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்புதான். ஆசிய சந்தைகள் மற்றும் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடனேயே வர்த்தகமாகின்றன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ளில் 375 பங்குகள் விலை அதிகரித்தும், 120 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 
 
 

 

விலை அதிகரித்த பங்குகள்:

 

 

 

 ஜின்டால் ஸ்டீல் 4.72
 
டாடா பவர் 3.39
எல்&டி 2.78
செஸா ஸ்டெர்லைட் 2.16
கோல் இந்தியா 2.06
 
 

 

 விலை குறைந்த பங்குகள்:

 

 

 

 டிஎல்எஃப் -1.76
ஐடிசி -1.55
டாக்டர் ரெட்டிஸ் லேப் -1.51
கெய்ர்ன் இந்தியா -1.19
கெயில் -1.03

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close