Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓலா நிறுவனம் டாக்ஸி ஃபார் சூர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது

ஓலா நிறுவனம் டாக்ஸி ஃபார் சூர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது
ஓலா டாக்ஸி நிறுவனம் டாக்ஸி ஃபார் சூர் என்கிற மற்றொரு டாக்ஸி நிறுவனத்தை 200 மில்லியன் டாலர் (1,200 கோடி ரூபாய்) விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்திய டாக்ஸி நிறுவனங்களில் இதுதான் முதல் மற்றும் மிகப் பெரிய கையகப்படுத்துதல் நடவடிக்கையாகும்..
ஓலாவுக்கு இந்தியாவில் ஒரு லட்சம் டாக்ஸிகளுடன் இந்தியாவின் 67 பெரிய நகரங்களில் தன் சேவையை வழங்கி வருகிறது. இதன் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் (6,000 கோடி ரூபாய்).
டாக்ஸி ஃபார் சூர் நிறுவனம் 15,000 டாக்ஸிகளுடன் இந்தியாவின் 47 முக்கிய நகரங்களில் சேவையை வழங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்கள் இணைந்த பிறகும் டாக்ஸி ஃபார் சூர் அதே பெயரில் இயங்கும் என்று ஓலா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு நிறுவனங்களும் பலதரப்பட்ட நிறுவனங்களிடமிருந்து  நிதி திரட்டி இயங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே ஓலா நிறுவனத்தால் பல சிறிய மற்றும் நடுத்தர டாக்ஸி நிறுவனங்கள் காணாமல்போய் இருக்கிறது. தற்போது இந்தியாவின் இரண்டு பெரிய டாக்ஸி நிறுவனமும் ஒன்று சேர்ந்து செயல்பட இருப்பதால், இந்தியாவின் டாக்ஸி சந்தையில் மேலும் பல புதிய கார்ப்பரேட் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close