Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடன் வட்டி விகிதத்தை குறைத்தது ஆர்பிஐ

ஆர்பிஐ வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி ஆர்பிஐ சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாலும், பணவீக்கம் நிலையாக உள்ளதாலும் இந்த விகிதத்தை 8 சதவிகிதத்திலிருந்து 7.75 சதவிகிதமாக குறைத்தது.
 
தற்போது இதில் மேலும் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து 7.5 சதவிகிதமாக இன்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் வழங்கப்படும் வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது.
 
அரசு நிதி பற்றாக்குறையை 3 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதனையடுத்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக இந்த கடன் வட்டி குறைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
சிஆர்ஆர் விகிதத்தில் எந்த மாற்றமும் இன்று 4 சதவிகிதம் என்ற நிலையே தொடரும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பின் காரணமாக இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. சென்செக்ஸ் 30000 புள்ளிகளை கடந்தும், நிஃப்டி 9000 புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close