Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒதுக்கீடுகள் மூலம் திரட்டப்படும் நிதி அதிகரிப்பு

ஒதுக்கீடுகள் மூலம் திரட்டப்படும் நிதி அதிகரிப்பு


ஒரு நிறுவனம் நிதி திரட்ட பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு வழிதான் ப்ளேஸ்மென்ட் (Placement). இந்தவகையான நிதி ஒதுக்கீடுகள் ஒரு குறிப்பிட்ட சில நபர்களையோ, நிறுவனத்தையோ மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டுமே பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். இதற்குப் பெயர்தான் ஒதுக்கீடுகள்.
இந்திய நிறுவனங்கள் ஒதுக்கீடுகள் மூலம் திரட்டும் நிதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தைவிட இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டு மடங்கு நிதி திரட்டப்பட்டுள்ளது. செபியின் கணக்கு படி ஒதுக்கீடுகள் மூலம் 2014 பிப்ரவரியில் 20,171 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. 2015 பிப்ரவரியில் 41,847 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இந்த 2015 பிப்ரவரியில் 162 நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நிதிகள்,  நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டில் (2013 – 2014) 2.76 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 2014 – 2015ல் இதுவரை 3.57 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close