Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை - வாட்ஸ்அப் செய்தி உண்மையா?

வங்கிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை - வாட்ஸ்அப் செய்தி உண்மையா?

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் வங்கிகளுக்கு தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை. அதனால் மக்கள் பணப்பரிமாற்றம் செய்ய சிரமப்படுவார்கள் என்று ஒரு செய்தி பரவிவருகிறது.

இதில் வந்துள்ள செய்தி என்னவெனில் மார்ச் 28ம் தேதி ஸ்ரீராம நவமி அன்று வங்கிகளுக்கு விடுமுறை என்றும், மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30 வங்கிகள் செயல்படும், மார்ச் 31ம் தேதி வங்கிகளுக்கு நிதியாண்டு கணக்கு முடிப்பு என்பதால் விடுமுறை. மறுநாளும் ஏப்ரல் 1ம் தேதி இதே காரணத்துக்காக விடுமுறை என்றும், ஏப்ரல் 2,3 முறையே மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி விடுமுறை, ஏப்ரல் நான்காம் தேதி சனிக்கிழமை அரைநாள் மட்டுமே வங்கிகள் இயங்கும், ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் விடுமுறை ஆகவே ஒரு வாரம் வங்கிகள் தொடர்ச்சியாக விடுமுறையில் உள்ள சூழல் உருவாக உள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள் என்ற வாட்ஸ் அப் செய்தி பரவி வருகிறது.


இது உண்மையா?

இந்த செய்தி உண்மையா என்பது குறித்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகளை கேட்டோம்.

அதற்கு அவர்கள் மார்ச் 28ம் தேதி வட இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு தான் விடுமுறை தமிழகத்தில் உள்ள வங்கிகள் இயங்கும் என்றும், ஏப்ரல் 1 முதல் ஏபரல் 3 வரை உள்ள 3 நாட்களுக்கு மட்டுமே தொடர்ச்சியான விடுமுரை இருக்கும் என்றும், மற்றபடி ஒரு வார விடுமுறை இல்லை என்றும் தெரிவித்தனர். ஏடிஎம் மையங்களிலும் போதிய அளவு பணம் நிரப்பப்படும் என்பதால் மக்கள் அவதிப்பட தேவையில்லை என்றும் கூறினர்.

இதனால் வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் இயங்கும் என்பதால் வாட்ஸ் அப் செய்தி வெறும் வதந்தியே என்று வங்கிகள் கூறியுள்ளன.


 


 


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close