Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!

கடந்த 29 மாதங்களில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி அந்நிய நேரடி முதலீடானது 448 கோடி டாலராக உயர்ந்து காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டான 2014, ஜனவரியில் 218 கோடி டாலர் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் பார்க்கும்போது தற்போதைய அந்நிய நேரடி முதலீடானது இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.  நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும்  36% முதலீடு உயர்ந்திருக்கிறது. இதில் டெலிகாம் துறை அதிக முதலீடுகளை பெற்றிருக்கிறது. இந்த 10 மாத காலத்தில் 283 கோடி டாலர் முதலீட்டையும், சேவை துறை 264 கோடி டாலர், ஆட்டோமொபைல் துறை 204 கோடி டாலர், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் 130 கோடி டாலர்  மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் 125 கோடி டாலர் அளவுக்கு முதலீட்டையும் பெற்றிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் மொரீஷியசில் இருந்து 766 கோடி டாலர், சிங்கப்பூரில் இருந்து 526 கோடி டாலர், நெதர்லாந்தில் இருந்து 313 கோடி டாலர், ஜப்பானில் இருந்து 161 கோடி டாலர் மற்றும் அமெரிக்காவில் இருந்து 158 கோடி டாலர் முதலீடு வந்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close