Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்......

3.30 மணி நிலவரம்

கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளி அன்றும் சந்தை இறக்கத்தில் முடிந்தது. இன்றோடு இது நான்காவது நாளாக தொடர்ந்து இறக்கத்தில் முடிந்திருக்கிறது இந்திய சந்தைகள். மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 69.06  புள்ளிகள் குறைந்து 28192.02 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 20.00 புள்ளிகள் குறைந்து 8550.90 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.23 சதவிகிதமாக இருந்தது.

 

10 கிராம் தங்கத்தின் விலை 57  ரூபாய் குறைந்து 26,125 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 72  ரூபாய் அதிகரித்து  2,876 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.32 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

வர்த்தக நேர  முடிவில் ஆட்டோமொபைல், மெட்டல் போன்ற துறைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாயின. வங்கி, ஐ.டி, ஸ்மால் கேப், மிட் கேப் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 896 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,978 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 124 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 26 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 24 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

என் டி பி சி                  3.20%

ஹிண்டால்கோ  2.92%

எம் அண்ட் எம் 1.73%

சேச ஸ்டெர்லைட் 1.65%

கெயில் 1.63%

இறக்கப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் -6.17%

பி ஹெச் இ எல் -3.64%

டெக் மஹிந்திரா -3.17%

கெர்ய்ன் இந்தியா -3.02%

என் எம் டி சி -2.51%

 

1.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 51.82 புள்ளிகள் அதிகரித்து 28359.81  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13.30  புள்ளிகள் அதிகரித்து 8584.20 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 58 குறைந்து  26,124 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 63 ரூபாய் குறைந்து 2885 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.30 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போதைய நிலவரப்படி ஆட்டோமொபைல், ஹெல்த் கேர் போன்ற துறைகளைத் தவிர அனைத்து துறைகளும் இறக்கத்தில்  வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் அதிகபட்சமாக ஷாங்காய் காம்போசைட் 1.91 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. குறைந்த பட்சமாக எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி 0.17 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகிறது. 

ஏற்றப் பங்குகள்

ஹிண்டால்கோ  3.33%

எம் அண்ட் எம் 2.75%

என் டி பி சி                2.58%

பவர் கிரிட் கார்ப் 1.72%

க்ராசிம் 1.71%

இறக்கப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் -7.96%

என் எம் டி சி -2.66%

டெக் மஹிந்திரா -2.39%

கெர்ய்ன் இந்தியா -2.31%

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 18.29 புள்ளிகள் அதிகரித்து  28279.37  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 0.55 புள்ளிகள் குறைந்து 8570.35  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.02 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 74 ரூபாய் குறைந்து 26,108 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2646 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2484 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 55  ரூபாய் குறைந்து  2,874 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.32 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

 

ஏற்றப் பங்குகள்

ஜி என்டர்டெயின்மென்ட் 2.08%

பவர் கிரிட் கார்ப்              1.08%

ஹிண்டால்கோ       1.21%

எம் அண்ட் எம்               1.64%

என் டி பி சி                               1.17%

இறக்கப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் -9.09%

என் எம் டி சி -3.65%

டெக் மஹிந்திரா -3.46%

பி ஹெச் இ எல் -2.56%

 

10.00 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 29.98 புள்ளிகள் அதிகரித்து  28291.06 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 0.55 புள்ளிகள் அதிகரித்து 8571.45 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.06 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய் குறைந்து 26,132 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 49  ரூபாய் குறைந்து  2,899 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.29 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
 
தற்போதைய நிலவரப்படி மூலதன பொருட்கள், எண்ணெய் மற்றும் காஸ் போன்ற துறைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மிட் கேப், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் மெட்டல் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
பார்தி ஏர்டெல் 1.91%
ஹிண்டால்கோ 1.21%
ஹெச் யூ எல் 1.19%
என் டி பி சி          1.17%
பவர் கிரிட் கார்ப் 1.08%
 
இறக்கப் பங்குகள்
ஜிண்டால் ஸ்டீல் -8.57%
என் எம் டி சி -2.89%
டெக் மஹிந்திரா -2.71%
டி எல் எஃப்         -1.91%
கோல் இந்தியா -1.33%
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close