இரண்டாவது நாள் ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்.........
(6).jpg)
3.30 மணி நிலவரம்
கடந்த வியாழன் அன்று சென்செக்ஸ் 654 புள்ளிகள் சரிந்து சந்தை நிறைவடைந்தது. அந்த சரிவை இன்றைய வர்த்தகத்தில் கிட்டதட்ட 500 புள்ளிகள் ஏற்றம் கண்டு சரிகட்டப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 517.22 புள்ளிகள் அதிகரித்து 27975.86 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 150.90 புள்ளிகள் அதிகரித்து 8492.30 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.
10 கிராம் தங்கத்தின் விலை 259 ரூபாய் அதிகரித்து 26,310 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 139 ரூபாய் அதிகரித்து 3,013 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.62 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
வர்த்தக நேர முடிவில் வங்கி, ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஸ்மால் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின. கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எண்ணெய் மற்றும் காஸ், டெக்னாலஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் குறைந்த ஏற்றத்தில் வர்த்தகமாயின.
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,743 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 672 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 77 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 44 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், ஆறு நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஏற்றப் பங்குகள்
ஐடியா செல்லூலர் 6.21%
அல்ட்ராடெக் சிமென்ட் 5.08%
ஏசியன் பெயின்ட்ஸ் 3.77%
ஹெச்டிஎஃப்சி\ 3.44%
பார்தி ஏர்டெல் 3.43%
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -2.93%
ஹிண்டால்கோ -2.09%
கெர்ய்ன் இந்தியா -1.76%
டாடா பவர் -0.73%
1.30 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 354.52 புள்ளிகள் அதிகரித்து 27813.16 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 97.65 புள்ளிகள் உயர்ந்து 8439.05 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 227.00 ரூபாய் குறைந்து 26,342 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 128 ரூபாய் குறைந்து 3,030 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.64 ரூபாயாக வர்த்தகமாகிறது.
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் தோராயமாக ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமாக ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகளும் ஒரு சதவிகித ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. ஆசிய சந்தைகளில் பொதுவாக அனைத்து சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஸ்ட்ரைட் டைம்ஸ், தைய்வான் காம்போஸைட் போன்ற சந்தைகள் தேக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஏற்றப் பங்குகள்
அல்ட்ராடெக் சிமென்ட் 4.22%
ஐடியா செல்லூலர் 4.12%
ஓ என் ஜி சி 3.10%
ஐ டி சி 3.09%
பார்தி ஏர்டெல் 3.07%
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -3.76%
ஹிண்டால்கோ -2.05%
டாடா பவர் -1.54%
கெர்ய்ன் இந்தியா -1.51%
கெயில் -0.70%
11.30 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 267.01 புள்ளிகள் அதிகரித்து 27725.65 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 69.35 புள்ளிகள் உயர்ந்து 8410.75 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.90 சதவிகிதமாக இருக்கிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 127 ரூபாய் குறைந்து 26,442 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2679 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2505 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 115 ரூபாய் குறைந்து 3,037 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.64 ரூபாயாக வர்த்தகமாகிறது.
சந்தையின் அடிப்படைகள் எதுவும் தற்போது இந்திய சந்தைகளின் வர்த்தகத்தோடு ஒத்துப் போகாததால் சந்தையின் அதிகப்படியான ஏற்ற இறக்க நிலை தொடரும் என்றும், இந்த காலகட்டத்தில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும், மிக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆனால் குறுகிய கால முதலீடு செய்பவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
ஏற்றப் பங்குகள்
ஐடியா செல்லூலர் 4.21%
பார்தி ஏர்டெல் 4.10%
பிபிசிஎல் 2.67%
ஏசியன் பெயின்ட்ஸ் 2.61%
ஹெடிஎஃப்சி 2.38%
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -2.66%
கெர்ய்ன் இந்தியா -2.44%
ஹிண்டால்கோ -2.28%
கெயில் -1.37%
பேங்க் ஆஃப் பரோடா -1.24%
10.00 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 248.06 புள்ளிகள் அதிகரித்து 27706.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 67.85 புள்ளிகள் உயர்ந்து 8409.25 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.85 சதவிகிதமாக இருக்கிறது.
10 கிராம் தங்கத்தின் விலை 232 ரூபாய் குறைந்து 26,569 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 101 ரூபாய் குறைந்து 3,152 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.58 ரூபாயாக வர்த்தகமாகிறது.
வர்த்தக நேர தொடக்கத்தில் அனைத்து துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அதிகபட்சமாக மூலதன பொருட்கள், ஸ்மால் கேப் போன்ற துறைகள் சற்று கூடுதல் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக வர்த்தகமாவது, பொதுவாக அமெரிக்க மற்றும் உலக சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருப்பது போன்றவைகள் இந்திய சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.
ஏற்றப் பங்குகள்
பிபிசிஎல் 2.85%
ஏசியன் பெயின்ட்ஸ் 2.75%
பார்தி ஏர்டெல் 2.48%
ஐடியா செல்லூலர் 2.12%
ஹெடிஎஃப்சி 1.98%
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -2.35%
ஹிண்டால்கோ -1.57%
கெர்ய்ன் இந்தியா -0.95%
கெயில் -0.67%
பஜாஜ் ஆட்டோ -0.58%