ருபிபவரை வாங்கியது ஸ்நாப்டீல்......!
இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனம் நிதிச் சேவை நிறுவனமான ருபிபவர் நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளை வாங்கியது!
நிதிச் சேவைத் துறையில் செயல்பட விரும்பும் இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது ஸ்நாப்டீல் நிறுவனம். இதற்கான லைசென்ஸை இந்த நிறுவனம் தற்போதுதான் பெற்றிருக்கிறது என்பது முக்கியமான விஷயம்!
ருபிபவர் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக ஸ்நாப்டீல் நிறுவனம் எவ்வளவு பணத்தை தந்துள்ளது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.