Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய பருத்தி ஏற்றுமதி 41% குறையும்!

உலகிலேயே இந்தியாதான் அதிகமாக பருத்தி உற்பத்தி செய்யும் நாடு.  பருத்தி விற்பனையில்  இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நடப்பு பருவத்தில் இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 70 லட்சம் பொதிகளாக குறையும் என இந்திய பருத்திக் கழகம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த ஏற்றுமதி குறைவால் நடப்பு பருவத்தில் மட்டுமல்லாமல் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் பருத்தி தேவை அதிகரிப்பு மற்றும் சீனா  பருத்தி இறக்குமதி குறைவு போன்றவையே   ஏற்றுமதி குறைந்ததற்கான காரணமாகும். 

இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமானால், இந்தியாவிலிருந்து வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் உள்ள உள்நாட்டு பருத்தி தேவை ஏழு சதவிகிதம் அதிகரித்து 3.2 கோடி பொதிகளாக  உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close