Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜியாமி அதிரடி...முடிவு

 சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நிறுவனமான  ஜியாமி இனி தன் மொபைல் போன்களை ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் விற்பனை செய்யாமல் மற்ற பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான ஸ்நாப்டீல் மற்றும் அமேஸான் ஆகிய நிறுவனங்களின் மூலமும் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.  நாளை முதல் (ஏப்ரல் 08 2015) இந்த அறிவிப்பு செயல்படப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.

ஜியாமி நிறுவனம் 2014 ஜீலையில் தான் தன் முதல் ஸ்மார்ட் போனை இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் மூலம் மட்டும்  இந்தியாவில்களம் இறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஜியாமி ஃப்ளிப்கார்ட், அமேஸான் இந்தியா, ஸ்நாப்டீல் ஆகிய மூன்று  இ-காமர்ஸ் நிறுவனங்களிலும் கிடைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close