Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கி கடன் விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ!

 வங்கி கடன் விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ!

 
இன்று ஆர்பிஐ தனது கொள்கையில் முடிவுகளை வெளியிட்ட போது. வட்டி விகிதம் எந்த வித மாற்றமும் இன்றி பழைய நிலையிலேயே தொடரும் என்று அறிவித்திருந்தது. ஏற்கெனவே இரண்டு முறை 25 அடிப்படை புள்ளிகளை குறைத்த போது வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எந்த வங்கியும் குறைக்கவில்லை.
 
தற்போது ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என்று அறிவித்த சில மணி நேரங்களில் எஸ்பிஐ மற்றும் ஹச்டிஎஃப்சி வங்கிகள் கடன் விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. இதன்படி இனி கடன் விகிதம் 9.85 சதவிகிதமாக இருக்கும். இந்த குறைப்பு எஸ்பிஐ மற்றும் ஹச்டிஎஃப்சி ஆகியவற்றில் முறையே ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 13ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் இதனால் வருங்காலத்தில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்திலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக வங்கிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வங்கிகளை போல மற்ற வங்கிகளும் கடன் வட்டி விகித்ததை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close