Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் முதல் முறையாக வே பவுடர்கள்....

பரக் மில்க் ஃபுட்ஸ்  நிறுவனம் கோவர்தன் என்கிற பெயரில் தன் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனம் தற்போது வே (whey) பவுடர்களை தயாரிக்க இருக்கிறது. அதோடு பால் சார்ந்த பானங்களையும் அடுத்த மாதத்தில் வெளியிட இருக்கிறது.  இந்தியாவில் இந்திய நிறுவனம் ஒன்று வே பவுடர்களை உற்பத்தி செய்யப் போவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
வே என்பது சீஸ் தயாரிக்கும் போது கிடைக்கும் ஒரு உப பொருளாகும். இதை பயன்படுத்தி ப்ரோட்டீன் பவுடர்கள், மருந்துகள், குழந்தைகள் உணவுகள் போன்றவைகளை தயாரிக்கலாம்.ஏற்கனவே இந்த நிறுவனம் மத்திய பிரதேசத்தில் உள்ள மான்சர் என்னுமிடத்தில்  நாள் ஒன்றுக்கு 40 டன் சீஸ் உற்பத்தி செய்து வருகிறது. 
 
முதற்கட்டமாக டீமினரலைஸ்டு வே ப்ரோட்டீன் என்று அழைக்கப்படும் (dwp 28)  மருத்துவ மற்றும் குழந்தைகள் உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அணுப்பப்பட இருக்கிறது. மாதம் ஒன்றுக்கு 450 டன்கள் வே  உற்பத்தி செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close