Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவில் தங்கம் இனி புழங்கும்.

 10 கிராம் தங்கத்தின் விலை 59 ரூபாய் அதிகரித்து 26,580 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2509 ரூபாய்க்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்ருக்கு 2683 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 

இந்திய கோவில்களில் இருக்கும் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யவும், அந்த தங்க டெபாசிட்டுக்கு கோவில்களுக்கு வட்டியும் வழங்கபட இருக்கிறது. இந்த தங்கத்தை இந்திய சந்தைகளில் புழங்க விட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி கோவில்களில் உள்ள தங்கம் புழக்கத்திற்கு வந்தால் இந்தியாவின் தங்கத் தேவையில் ஆண்டுக்கு 800 - 1000 டன் வரை செய்யப்படும் தங்க இறக்குமதி குறையும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 
 
உலக அளவில் இந்தியா அதிக  தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இருக்கிறது. தங்கத்தின் தேவை குறையாதபட்சத்தில் தங்கத்திற்கான சப்ளையை அதிகரிக்க இந்த வழியை மத்திய அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது. வரும் மே 2015 முதல் இந்த திட்டம் செயல்பட உள்ளதாகவும் மததிய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணியில் தங்கத்திற்கு 28% செலவிடப்பட்டிருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close