Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் நேரம்....!

 நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் நேரத்தில் பங்குச் சந்தை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன்

உங்கள் கேள்விகளை @nanayamvikatan உங்கள் கேள்வி #AskNV என்று ட்விட் செய்து சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

நாணயம் விகடனின் பங்குச் சந்தை தொடர்பான   ட்விட்டர் கேள்வி பதில்கள் :

 1. தரமான பங்குகளை எப்படி கண்டுபிடிப்பது? அவற்றில் நீண்ட கால முதலீட்டிற்காக எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாமா?

 
உங்கள் இரண்டாவது கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன்; தரமான பங்குகளை மட்டுமே எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும். அதில் உறுதியாக இருங்கள்.
அடுத்ததாக, தரமான பங்குகளைக் கண்டுபிடிக்க கொஞ்சம் ஹோம்வொர்க் செய்ய வேண்டும்; விரிவாகச்  சொல்ல வேண்டிய பதில் இது. இருந்தாலும், சுருக்கமாகச் சொல்வதென்றால், ஃபண்டமெண்டல் அனலிசிஸ் மற்றும் டெக்னிகல் அனலிசிஸ் என்பதெல்லாம் போக முக்கியமான 3 விஷயங்களைக் கவனிக்கவும்: 
முதலாவதாக அந்த நிறுவனத்தின் புரொமோட்டர்கள் யார், அவர்களின் கடந்த கால டிராக் ரெக்கார்ட் எப்படி, ஒளிவு மறைவற்ற நேர்மையான முறையில் அவர்கள் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றனவா எனப் பார்க்கவும். இது முக்கியம். 
அடுத்ததாக அந்த நிறுவனம் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி இதுவரை எப்படி, இனி வரும் காலத்தில் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறையா? எனக் கவனிக்கவும். 
பின்னர், அதன் கடந்த காலச் செயல்பாடுகள், லாப நஷ்டக் கணக்கு, எவ்வளவு டிவிடெண்ட், போனஸ், புத்தக மதிப்பு, கடன் எவ்வளவு, போட்டி நிறுவனங்களின் பங்குகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இதன் சந்தை மதிப்பு அதிகமா, குறைவா என்பனவற்றையும் முக்கியமாக கவனித்து முதலீடு செய்யவும்.
 
 2. அடுத்த ஐந்தாண்டுகளில் எந்தெந்தப் பங்குகள் அதிக லாபம் தரும். அவற்றில் ஐந்தாண்டுகளில் எஸ் ஐபி முறையில் முதலீடு செய்யலாமா?
 
 பொதுவாகச் சொல்வதென்றால், அமெரிக்க வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு ஐடி., ஃபார்மா, மற்றும் எஃப்எம்சிஜி துறைகள ஓரளவுக்குப் பாதுகாப்பான முதலீட்டை நாடுபவர்களுக்கு ஏற்றது. 
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்து கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு இன்ஃப்ரா, சிமெண்ட், ஸ்டீல், கேப்பிடல் கூ ட்ஸ், மின்துறை ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றில் முன்னணி நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
 
3.  நீண்ட கால முதலீட்டுக்கு ( 10 ஆண்டுகள்) பார்மா பங்குகள் எப்படி?
 
நமக்கு வளமான எதிர்கால இருக்கிறதோ இல்லையோ, ஃபார்மா பங்குகளுக்கு வளமான எதிர்காலம் நிச்சயம் உண்டு - இவற்றில் அடிக்கடி அதிக சட்டச் சிக்கல்  இருக்கும் சில பங்குகளைத் தவிர்த்து.
 
4. சென்னையை சேர்ந்த நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். என் ஓய்வு நேரத்தில் ஃப்ராக்ஸ் டிரேடிங் செய்ய விரும்புகிறேன். இந்தியாவில் ஃப்ராக்ஸ் டிரேடிங் சட்ட விரோதம் என்று கேள்விபட்டிருக்கிறேன். இந்நிலையில் நான் ஃபாரக்ஸில் மார்ஜின் டிரேடிங் செய்யலாமா?  
 
இந்தியாவில் ஃபாரெக்ஸ் ட்ரேடிங் சட்ட விரோதம் இல்லை - இதற்கென செபி-யின் அனுமதி பெற்ற தேசியப் பங்குச் சந்தையிலோ அல்லது இதர அங்கீகரிக்கப்பட்ட சந்தைகளிலோ பதிவு பெற்ற தரகர்கள் மூலமாகச் செய்யும் பட்சத்தில். முன்பேர வர்த்தகத்தில் கட்டாயமாக மார்ஜின் கட்டித்தான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதும் விதி. ஆனால், வெளிநாட்டில் நேரடியாக வர்த்தகம் செய்து தருகிறேன் என்று சொன்னால் மட்டும் கவனம் தேவை.   
 
5. ங்குச் சந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை எப்படி அறிந்துக் கொள்வது?
 
நிறையப் படியுங்கள். செபி அமைப்பு, தேசியப் பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையின் இனையத்தளங்களில் இதற்கெனத் தனிக் கையேடுகள் தரவிறக்கம் செய்யும் முறையில் கிடைக்கும். இலவசமாகவே கிடைக்கும் அவற்றைப் படியுங்கள். பின்னர் இதற்கென தமிழிலேயே நிறையப் புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றையும் படியுங்கள். படிப்போடு கற்பதை நிறுத்தாமல், ஒரு சிறு தொகையை முதலீடு செய்து வர்த்தகத்தைத் துவக்குங்கள். அது  முழுவதும் இழந்தாலும் கவலைப்படத் தேவையில்லாத அளவுக்குச் சிறிய தொகையாக இருக்க வேண்டும். இங்குதான் உங்களின் உண்மையான கற்றல் துவங்கும். உங்கள் ஆர்வத்தைப் பொறுத்து ஒரு சில வாரங்களில் இருந்து சில ஆண்டுகள் கூட ஆகலாம் இதற்கு.
  
6. நடப்பு 2015-16 ம் ஆண்டில் அதிக லாபம் தரும் துறை எது?
 
 
அதிக வாய்ப்பு இன்ஃப்ரா துறைக்குத்தான். அதிலும் சிமெண்ட், ஸ்டீல் ( சீ னாவில் பி ரச்னை இருந்தாலும் கூட ) ஆகியவை. அதற்கு இணையாக கேப்பிடல் கூட்ஸ், ஐ.டி., ஃபார்மா, நிதி மற்றும் வங்கித் துறைகளும் இருக்கும். 
 
7. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?
 
பான் கார்டு, புகைப் படம், முகவரிக்கான சான்று ( பாஸ்போர்ட், டி ரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்ட், போன்றவை), டீமேட் கணக்கு வைத்திருப்பதற்கான சான்று, வங்கிக் கணக்கின் பாஸ்புக் / காசோலை ஆகியவை 5-ம் இருந்தாலே போதும்.  ட்ரேடிங் அக்கவுண்ட் திறக்கலாம்.
அதற்கு முன்னதாக டீமேட் கணக்குத் திறக்க வேண்டும். அதற்கும் பான் கார்ட், புகைப் படம், முகவரிச் சான்று, காசோலை ஆகியவை தேவைப்படும். 
 
8. நான் ஒரு வருடத்தில் எனது டீமேட் கணக்கில் எந்த பரிமாற்றமும் செய்யவில்லை என்றாலும் அதற்கு பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வார்களா?
 
வசூலிக்கலாம்; பங்குச் சந்தையில் முதன் முறை முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கான பி.எஸ்.டி.ஏ. எனச் சொல்லக்கூடிய ”பேசிக் செர்வீசஸ் டீமேட் அக்கவுண்ட்” வைத்திருந்தால் மட்டுமே இதில் இருந்து விதிவிலக்கு உண்டு. இந்த விலக்கைப் பெற சில விதி முறைகள் உண்டு; அவர்களுக்கு வேறு ஏதும் டீமேட் கணக்கு இருக்கக் கூடாது - இது ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும். இக்கணக்கில் இருக்கும் பங்கின் மதிப்பு எக்கட்டத்திலும் ரூ. 50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதுபற்றிய முழு விவரங்களை http://www.sebi.gov.in/cms/sebi_data/pdffiles/24288_t.pdf  என்ற இணைப்பில் பார்க்கலாம்.
 
 9. நான் பங்குச் சந்தைக்கு புதியவன், என் மூலதனத்தை காப்பாற்ற மூன்று விதிகளை கூறுங்கள்?
 
 
 
அ.சேமிப்பு போக மீதமுள்ள உபரி தொகையை மட்டுமே பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது
ஆ. நீண்ட கால முதலீடு (5-8 ஆண்டுகள்) 
இ. பல துறை நிறுவன பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது.
 
 
10. தற்போதைய நிலையில் குறுகிய கால முதலீடு (ஓராண்டு )செய்ய ஏற்ற துறை எவை? 
 
இன்ஃப்ரா துறை. இந்த துறையில் தரமான பங்குகள் குறைவு என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
 
11. பங்குச் சந்தை முதலீட்டில் ரிஸ்க் எப்படி தவிர்ப்பது?
 
பங்குச் சந்தையும் ரிஸ்க்கும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றது.இவற்றை பிரிக்க முடியாது. 
 
ரிஸ்க்கை குறைக்க பல துறை நிறுவன பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது. எஸ் ஐபி முறையில் நீண்ட கால மூதலீடுகளை மேற்கொள்ளலாம்
 
 
12. ஆயில் நிறுவனப் பங்குகளை வாங்க இது சரியான நேரமா? 

கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் ஆயில் நிறுவன பங்குகளை வாங்கலாம்.


13.மேக் இன் இந்தியா திட்டத்தால் உற்பத்தி துறை பங்குகள் லாபம் பெறுமா?

 
 உற்பத்தி துறை வளர்ச்சி அடையும் என்பதால் உற்பத்தி துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் காணும் என்ற அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
 
14. ஒரு துறை சார்ந்த முதலீடுகளில் ஈடுபடுவது நன்மையளிக்குமா. உதாரணமாக கார், டயர், ரப்பர், ரப்பரை பயிர் செய்யும் நிறுவனப் பங்குகள் என்று இந்த சங்கிலித் தொடராக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு வாகன விற்பனை அதிகரிக்கும். இதனால் நீங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் கவனம் செலுத்தலாம். அதே நேரத்தில் ஒரே துறை பங்குகளில் முதலீடு செய்யும் போது அதிக ரிஸ்க் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


15. அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தைகள் எப்படி இருக்கும்?

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய சந்தைகள் நன்றாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.
 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close