டுவிட்டரில் வேலை..!
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஜிப்டையல் ( Zipdial) என்கிற நிறுவனத்தை வாங்கியிருக்கிறது. "இந்த நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே இனி செயல்படும் என்றும், இது டுவிட்டர் நிறுவனத்தின் இன்ஜினியர் சென்டர் என்பதையும்" டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்ற ஆண்டுராய்ட் டெவலெப்பர், மீடியா பார்ட்னர்ஷிப் மேனேஜர், சைர் ரிலையபிலிட்டி இன்ஜினியர் (site reliability engineer), சப்போட்ர் இன்ஜினியர் ஆகிய பதவிக்கு பணியாட்கள் தேவைப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் இருக்கும் 280 மில்லியன் டுவிட்டர் பயனாளர்களில், இந்தியாவில் மட்டும் 35 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.