Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஐடி துறைச் சார்ந்த பங்குகளில் அதிகரித்திருக்கிறது!

இன்றைய நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களின் முதலீடுகளை ஐடி துறை சார்ந்த பங்குகளில் வைத்திருக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் கடந்த ஆண்டில் பிஎஸ்இ சென்செக்ஸ் 25% அதிகரித்திருக்கும் நிலையில் ஐடி இன்டெக்ஸ் 40% அதிகரித்திருப்பதுதான். 2014-15-ம் நிதி ஆண்டில் மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐடி துறை சார்ந்த பங்குகளில் செய்திருக்கும் செய்திருக்கும் தொகை 36,121 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மொத்த ஈக்விட்டி சொத்து மதிப்பில் 10 சதவிகிதமாக உள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில், அதாவது மார்ச் 2014-ல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐடி துறை சார்ந்த பங்குகளில் செய்திருந்த முதலீடு 24,315 கோடி ரூபாயாகவும், மார்ச் 2013-ல் அது 19,196 கோடி ரூபாயாகவும், மார்ச் 2012-ல் 18,177 கோடி ரூபாயாகவும் காணப்பட்டது. 2014-15-ம் நிதி ஆண்டில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு 12 லட்சம் கோடிகளாக அதிகரித்து காணப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close