Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விப்ரோவின் காலாண்டு முடிவுகள பாசிட்டிவ்....

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனமான  விப்ரோவின் 2015 மார்ச் மாத காலாண்டில், நிகர லாபம் இரண்டு சதவிகித அதிகரித்திருக்கிறது. விப்ரோவின்  வருமானம் நான்கு சதவிகிதம் உயர்ந்து 12,142 கோடி ரூபாயாகவும், அதன் நிகர லாபம் இரண்டு சதவிகிதம் உயர்ந்து 2,272 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.

ப்ளூம்பெர்க் நிறுவனம் விப்ரோவின் 2015 மார்ச் காலாண்டின் வருவாயாக  12,053 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 2,166 கோடி ரூபாயாகவும்  கணித்திருந்ததை விட விப்ரோ சற்று கூடுதல் வளர்ச்சி அடைந்திருப்பது  குறிப்பிடத்தக்கது.
 
இந்த பாசிட்டிவான செய்தியால் நேற்றைய பங்கு வர்த்தகத்தில் மட்டும் பி.எஸ்.இ யில் 3.85 சதவிகிதமும், என்.எஸ்.இ யில் 2.75 சதவிகிதமும் உயர்ந்து முறையே ரூ. 578.80, ரூ. 578.15 க்கு வர்த்தகமாகி நிறைவடைந்தன. இத்தனைக்கும் நேற்றைய சந்தை சரிவிலேயே முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close