Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக புத்தக தினம் -ஆளுமை பண்பை வளர்க்கும் ஐந்து புத்தகங்கள்

உலக புத்தக தினம்

மனிதர்கள் தன்னை மேம்படுத்தி கொள்ள, தரமுயர்த்த, புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள புத்தகங்களையே நாடுகிறார்கள். அப்படி பட்ட புத்தகம் பேப்பர் வடிவத்திலிருந்து இ-ரீடர், ஐபேட் என பல வடிவங்களில் மனிதரை சென்றடைந்து விட்டது. அப்படிப்பட்ட புத்தகங்களுக்கான தினத்தில் நாணயம் விகடனில் நாணயம் லைப்ரரி பகுதியில் வெளியான ஆளுமை பண்பை வளர்க்கும் ஐந்து புத்தகங்களை பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம்.

 

'ஹீரோ’வின் வெற்றிப் பயணம்!

ஓ.பி. முன்ஜால் - சைக்கிள் உலகின் 'ஹீரோ’. இன்றைக்கு இருசக்கர வாகன உலகில் கொடிகட்டிப்பறக்கும் ஹீரோ மோட்டார்ஸ் என்கிற நிறுவனம் பிறப்பதற்கு அடிப்படையாக இருந்தவர் இந்த ஓ.பி.முன்ஜால்தான். 1956-ல் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் சைக்கிள் தயாரிப்பில் இறங்கியபோது நாளன்றுக்கு 25 சைக்கிள்கள் மட்டுமே தயாரித்து விற்றது ஹீரோ நிறுவனம். ஆனால், இன்றைக்கு நாளன்றுக்கு 18,500 சைக்கிள்களை தயாரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது (வருடத்துக்கு ஏறக்குறைய 60 லட்சம் சைக்கிள்கள்!). குடும்பத்தினர் நிர்வகிக்கும் நிறுவனங்களும் சாதனை படைக்கலாம் என்பதற்கு முன்ஜால் குடும்பத்தினரின் ஹீரோ நிறுவனம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

 

 

தனிமனித ஆளுமையை வளர்க்கும் வழிகள்!

தனிமனித ஆளுமையை வளர்த்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றிச் சொல்லும் ‘பவர் க்யூஸ்’ என்னும் புத்தகத்தைத்தான் பார்க்கபோகிறோம். நிக் மோர்கன் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் உடல்மொழி மற்றும் குறிப்பறிதல் என்ற இரண்டு விஷயங்களின் முக்கியத் துவத்தை விளக்குவதாக இருக்கிறது. முதலில் இந்தப் புத்தகத்தை எழுது வதற்கான காரணங்களைச் சொல்கிறார் ஆசிரியர்.சிறுவயதில் ஒரு விளையாட்டின் போது மண்டையோடு உடையும் அளவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை  செய்து கொண்டபோது ஒரு பதினைந்து நிமிட நேரம் இறந்துபோனதற்கு ஒப்பான நிலைக்குச் சென்று மீண்டாராம் ஆசிரியர். இறந்துபோய் விட்டாரே என டாக்டர்களே நினைத்துக் கொண்டிருந்தபோது மீண்டும் உயிர் திரும்பி, ‘நான் எங்கே இருக்கிறேன் என்ற டயலாக்கை உதிர்த்தேன்’ என்கிறார் ஆசிரியர்.

 

இந்த புத்தகம் பேச்சுக்கலையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வது. டார்லீன் ப்ரைஸ் என்பவர் எழுதிய ‘வெல் செட்’ என்கிற இந்த புத்தகம், எப்போதும் வெற்றி தரக்கூடிய பிரசன்டேஷன்களிலும் விற்பனைப் பேச்சுக்களிலும் திறமையோடு விளங்குவது எப்படி என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறது.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியையான டார்லீன் ப்ரைஸ், பிரசன்டேஷன்கள் மற்றும் சேல்ஸ் தொடர்பான பேச்சுக்கள் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தும் போது பயிற்சியாளர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, ஒரு பிரசன்டேஷனில் மிக மிக முக்கியமான விஷயம் எது என்பதைத்தானாம். உடல்மொழி (பாடி லாங்குவேஜ்), குரல் ஏற்றஇறக்கங்கள் (டோன்), புரொஃபஷனல் இமேஜ், ஓப்பனிங், குளோஸிங், காமெடி, சூப்பரான படங்கள், ஸ்டோரி டெல்லிங் என பல விடைகளையும் சொல்வார் களாம். ‘‘இது அத்தனையும் தவறு. ஆடியன்ஸ் (பேச்சைக் கேட்க வந்திருப்பவர்கள்) என்பதுதான் சரியான விடை'’ என்கிறார் டார்லீன்.

 

பாசிட்டிவ், நெகட்டிவ்: உங்கள் ஆட்டிட்யூட் எப்படி?

புத்தகம் 'தி டாப் பர்ஃபார்மர்’ஸ் கைடு டு ஆட்டிட்யூட்’ என்னும் டிம் உர்ஸினி, கேரி டிமோஸ் மற்றும் மார்க் ஏ.யாபன் என்ற மூவர் சேர்ந்து எழுதியது. நம் ஆட்டிட்யூடை மாற்றிக்கொள்வதன் மூலம் நாம் நம்முடைய பணியிடத்தில் எப்படி முன்னேறலாம் என்று சொல்லும் புத்தகம் இது.

தன்னுறுதியே (பாசிட்டிவிட்டி) உலகை வெல்லத் தேவையான அடிப்படை மந்திரம். இந்தத் தன்னுறுதியையும் மனப்பாங்கையும் (ஆட்டிட்யூட்) செப்பனிட்டு சீர்செய்து வெற்றி பெறுவது எப்படி என்பதைச் சொல்லித்தருவதே இந்தப் புத்தகத்தின் பணி என்கிறார்கள் ஆசிரியர்கள்.

 

 

வாழ்க்கையை பாசிட்டிவ்வாக மாற்றுங்கள் !

வாழ்க்கையில் நீங்கள் சின்னச் சின்ன மாறுதல்களைக் கொண்டுவர முயற்சித்து வெற்றி பெற்றீர்கள் என்றாலே பெரிய அளவிலான வெற்றிகள் உங்களைத் தேடி ஓடிவரும் என்கிற கருத்தைச் சொல்லும் புத்தகம்தான் ரிச்சர்டு கால்சன் எழுதிய ‘ஈஸியர் தன் யு திங்க்’. நாம் எல்லோருமே நம்முடைய தற்போதைய நிலைமையிலிருந்து மாற வேண்டும் என்பதை விரும்புகிறோம். ஆனால், மாறவே முடிவதில்லை.  இதுபோன்ற சின்னச் சின்ன முன்னேற்றத்துக்கான மாறுதல்களை அவர்களுடைய வாழ்க்கையில் அன்றாடம்          ஏற்படுத்திக்கொள்ள முடியும்'' என்கிறார் ஆசிரியர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close