Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃபோசிஸ்: நிகரலாபம் 4.6% குறைவு!

பக்குச்சந்தையின் போக்கை மாற்றக் கூடிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு இன்று வெளியானது. வழக்கமாக இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள்தான் அனைத்து நிறுவனங்களுக்கும் முன்னதாக வெளியாகும். ஆனால் இந்த காலாண்டு முடிவு மட்டும், பல்வேறு நிறுவனங்களில் காலாண்டு முடிவுகள் வெளியான பிறகு வெளியாகி இருக்கிறது. இதற்கு காரணம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 4.6% குறைந்திருப்பதுதான்.

கடந்த 2014-15-ம் நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டின் நிகர லாபம் 498 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் 522 மில்லியன் டாலராக இருந்தது. 2013-14-ம் ஆண்டின்  இதே காலாண்டில் 487 மில்லியன் டாலராக காணப்பட்டது. நிறுவனத்தின் லாபம் குறைந்ததற்கு, அமெரிக்காவின் களிடஸ் (US-based design firm Kallidus) என்கிற நிறுவனத்தை 120 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியதுதான் மிக முக்கிய காரணமாகும்.
 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்தது இன்றைய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. இன்றைய பங்குச் சந்தை முடிவில் மும்பை பக்குச் சந்தையான சென்செக்ஸ் 297 புள்ளிகள் குறைந்து, தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 93 புள்ளிகள் குறைந்தும் காணப்பட்டன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 126.80 (5.98%) குறைந்து, 1,995.20 ரூபாய்க்கு வர்த்தகமானது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close