குறிப்பிடும்படியான சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்
இந்திய சந்தையின் சென்செக்ஸ் இன்ரு மட்டும் 722 புள்ளிகளுக்கு மேல் சரிந்து தன் 18ஆவது மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அதே போல் நிஃப்டி 227 புள்ளிகள் சரிந்து தன் இரண்டாவது மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.
சென்செக்ஸ் 26717.37 மாற்றம் -722.77
நிஃப்டி 8097.00 மாற்றம் -227.80
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 2.68%
தங்கம் 10 கிராம் ரூ.26,910 மாற்றம் ரூ. +10.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,946.00 மாற்றம் ரூ. +89.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.59 ரூபாயாக வர்த்தகமாகிறது.
இந்தியாவின் அனைத்து துறைகளும் இறக்கத்திலேயே வர்த்தகமாயின. வங்கி, மூலதன பொருட்கள், ஆட்டொமொபைல் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்திலும், ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலும், ஆசிய சந்தைகளில் ஜகர்தா காம்போஸைட் தவிர மற்ற சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஏற்றப் பங்கு
பார்தி ஏற்டெல் 0.81
இறக்கப் பங்குகள்
பி ஹெச் இ எல் -6.30
அம்புஜா சிமென்ட்ஸ் -5.18
கொட்டக் மஹிந்திரா -5.06
ஐசிஐசிஐ பேங்க் -4.96
லார்சன் -4.73
1.30 மணி நிலவரம்
இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 628.05 புள்ளிகள் குறைந்து 26812.09 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 201.05 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. இதனால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலையும் குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. இந்த இறக்க நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குவிலை 2% அதிகரித்து 394.80 ரூபாய் என்கிற நிலையில் காணப்படுகிறது.
மொத்தம் 2,042 நிறுவனப் பங்கு விலை இறக்கத்திலும், 466 நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்திலும் மற்றும் 156 நிறுவனத்தின் பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமலும் வர்த்தகமாகி வருகின்றன. பத்து கிராம் தங்கத்தின் விலை 44 ரூபாய் அதிகரித்து 26,924 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 0.22% அதிகரித்து 63.58 ரூபாயாக வர்த்தகமாகிறது.
10.30 மணி நிலவரம்
சென்செக்ஸ் 26963.49 மாற்றம் -476.65
நிஃப்டி 8171.50 மாற்றம் -153.30
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 1.80%
தங்கம் 10 கிராம் ரூ.26,994 மாற்றம் ரூ. 114.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,922.00 மாற்றம் ரூ. +65.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.55 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக ஏற்றம் அடைந்து வருகிறது. இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணி மற்றும் வர்த்தகம் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
ஏற்றப் பங்குகள்
பார்தி ஏற்டெல் 3.97%
கெர்ய்ன் இந்தியா 0.47%
இறக்கப் பங்குகள்
பிபிசிஎல் -3.96%
பி ஹெச் இ எல் -3.59%
அம்புஜா சிமென்ட்ஸ் 3.55%
சிப்லா -3.04%
ஏசியன் பெயின்ட்ஸ் -2.78%
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்