Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபியூச்சரை வாங்கிய பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்!

 

இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட் ஆன ஃப்யூச்சர் ரீடெய்லும் (Future Retail), பார்தி ரீடெய்லும் (Bharti Retail) ஒன்றாக இணைந்திருக்கின்றன. அண்மைக் காலம் வரை ரீடெய்ல் துறையில் எலியும், பூனையுமாக இருந்த இரண்டு நிறுவனங்கள் இன்றைக்கு ஒன்று சேர்ந்துவிட்டன. எப்படி நிகழ்ந்தது இந்த இணைப்பு? 


ஃப்யூச்சர் ரீடெய்லும், பார்தி ரீடெய்லும் (பார்தி என்டர்பிரைசஸின் ஒரு அங்கம். இது ஏர்டெல் குழுமத்தைச் சார்ந்தது) ஒன்றாக இணைவதன் மூலம் கிட்டத்தட்ட 570 ரீடெய்ல் கடைகள் ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும். இந்த 570 கடைகளும் சுமார் 18.5 மில்லியன் சதுர அடிகளில் 243 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த இரு நிறுவனங்களின் கட்டமைப்பு, முதலீடு, சொத்து பராமரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களும் ஃப்யூச்சர் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் செயல்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மாடர்ன் ரீடெய்லின் பிதாமகராக வலம் வருபவர் கிஷோர் பியானி. 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த இவரது ஜாதகக் கணிப்பைப் பார்த்த குடும்பத்தினர் அனைவருக்கும் பரம திருப்தி. காரணம், வாழ்க்கையில் வெற்றிகள் பல அடைந்து புகழோடு வாழ்வார் என கிஷோரின் ஜாதகத்தில் சொல்லப்பட்டு இருந்தது. 

 

 

குமார் ராஜகோபாலன், சிஇஓ,

ரீடெயில் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

இவரது ரீடெய்ல் பயணம் இவருடைய பதின்ம வயதிலேயே ஆரம்பமாயிற்று. அதன்பின் 2001-ஆம் ஆண்டு முதன் முதலாக `பிக் பஜார்’ என்கிற பெயரில் `நவீன பலசரக்குக் கடை’யைத் திறந்தார். கடந்த 14 ஆண்டுகளில் 10 மில்லியன் சதுர அடிகளில் 95 நகரங்களில் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறது இந்தக் குழுமம். இதில் ஹைப்பர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், எலக்ட்ரானிக் கடைகள் என அனைத்தும் அடங்கும். வருடத்துக்கு 30 கோடி நுகர்வோர்களுக்கு (அதாவது, இந்தியாவின் மக்கள் தொகையில் 25%) இந்த கடைகள் தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 


ரீடெய்ல் துறையில் பிக் பஜார் ஒரு`ட்ரெண்ட் செட்டர்’ என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள்தான் 2006-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின அதிரடி ஆஃபர் அளித்து சில நகரங்களில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தவர்கள். இந்த ஒரு நாள் விற்பனை மட்டும் ஆண்டு விற்பனையில் ஏறக்குறைய 20-30% இருக்கப் போகவே, ஆகஸ்ட் 15, மே 1 என பொது விடுமுறை நாட்களில் எல்லாம் `அதிரடி’ச் சலுகைகளை அறிவித்து நுகர்வோர்களை சுண்டியிழுத்தது பிக் பஜார்.  


ஏர்டெல் குழுமத்தைச் சேர்ந்த பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம் 2007-ஆம் ஆண்டு ரீடெய்ல் துறையில் வால்மார்ட்டின் உதவியுடன் நுழைந்தது. வெளிநாட்டு ரீடெய்ல் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்த சட்டம் அனுமதிக்காததால், `புழக்கடை வழியாக’ அதாவது, மொத்த வியாபாரம் செய்கிறோம் என்கிற பெயரிலும், இந்திய நிறுவனமான பார்தி என்டர்பிரைசஸுக்கு கட்டமைப்பு, லாஜிஸ்டிக் சம்பந்தமாக உதவி செய்கிறோம் என்கிற பெயரிலும் உலகத்தில் நம்பர் 1 சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட், பார்தியுடன் கைகோர்த்தது. பஞ்சாபில் `பெஸ்ட் பிரைஸ் ஹோல்சேல் கேஷ் அண்ட் கேரி (Best Price Wholesale Cash & Carry)’ கடையைத் திறந்தது. 


அதன்பின் 2009-ம் ஆண்டு பார்தி குழுமம் `ஈஸீ டே’ என்கிற பெயரில் நவீன பலசரக்குக் கடைகளைத் திறந்தது. இன்றைக்கு 13 மாநிலங்களில், ஏறக்குறைய 110 நகரங்களில், 200-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறது. 2012/13-ம் ஆண்டு ஏற்பட்ட சர்ச்சையின் (ஊழல்) காரணமாக வால்மார்ட் - பார்தி ரீடெய்லுடனான தனது நட்பை முறித்துக் கொண்டு தனது நடையைக் கட்டியது. 


இப்போது பார்தியுடன் ப்யூச்சர் நிறுவனம் இணைந்திருப்பதால், மற்ற நவீன பலசரக்குக் கடைகளான மோர், ஸ்பென்சர்ஸ், ஃபுட்வோர்ல்ட், ஸ்பார், ரிலையன்ஸ் ஆகியவற்றுக்கு ஒரு சவாலாக இருக்கும். இந்த இணைப்பின் மூலம், ஏறக்குறைய 570 கடைகள், 200 மேற்பட்ட நகரங்களில் ஒரே குழுமத்தின் கீழ் செயல்படும். ஒரே குழுமத்தின் கீழ் அதிகக் கடைகள் இயங்க இருப்பதால், தயாரிப்பாளர்களிடம் கடினமாக பேரம் செய்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்க முடியும். அதனால் அவர்கள் அடையும் பலனை நுகர்வோர்களுக்கும் அளிக்க வாய்ப்புண்டு.  


ஏறக்குறைய 750 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ள ‘டீல்’ இது. பணத்தைத் தருவதற்கு பதிலாக முழுக்க முழுக்க பங்குகளை பரிமாறிக்கொள்கிற மாதிரி இந்த டீலை முடித்திருக்கிறார்கள் பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜன் மிட்டலும் ஃப்யூச்சர் குரூப்பின் சிஇஓவுமான ரமேஷ் பியானியும். இந்த இரு அமைப்புகளும் இணைந்ததன் மூலம் 2021-ம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 4000 புதிய கடைகள் திறக்கப் போவதாக சொல்லி இருக்கிறார் ரமேஷ் பியானி. 


ஃப்யூச்சர் ரீடெயில், பார்தி ரீடெய்ல் என்கிற இரண்டு சில்லறை வணிக குழுமங்களும் சமீபத்தில் ஒன்றிணைந்தது குறித்து ரீடெயிலர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் சிஇஓ. குமார் ராஜகோபாலனிடம் கேட்டோம். 


‘‘இரண்டு குழுமங்களின் சிறப்பியல்புகளும் ஒன்றிணையும்போது அதனுடைய விளைவு முன்பு இருந்ததைவிட மிகவும் சிறப்பாக இருக்கும். சில்லறை வணிகத் துறையைப் பொறுத்தமட்டில், இந்த மாதிரியான ஒருங்கிணைப்பு ஏற்படுவதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் நுகர்வோர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும். அதுதவிர, ஒரே குழுமத்தின் கீழ் அதிகமான கடைகள் இயங்கும் வாய்ப்பை இது உருவாக்கியிருப்பதால், பொருட்களைப் போட்டி விலைக்கு (Competitive price) வாங்குவதன் மூலம் நுகர்வோர்களுக்குக் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியும். ரீடெய்ல் துறையில் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி இல்லாத இந்தக் காலகட்டத்தில் இந்த மாதிரியான ஒருங்கிணைப்பு இத் துறையில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்’ என்று கூறினார். 


ஃப்யூச்சர் ரீடெய்லின் அதிரடிச் சலுகை போல இதுவும் இந்திய ரீடெய்ல் துறையில் ஒரு அதிரடியான நகர்வுதான் இது. ஆனாலும் நுகர்வோர்களாகிய நமக்கு இதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

விக்னேஷ் சித்தார்த்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close