Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃபோசிஸ் கோபால கிருஷ்ணன் புதிய நிறுவனத்தில் முதலீடு!

 

இன்ஃபோசிஸ் கோபால கிருஷ்ணன் புதிய நிறுவனத்தில் முதலீடு!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபால கிருஷ்ணன், சென்னையை தலைமை இடமாக கொண்ட யுனிப்போர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் ஸ்பீச் ரெக்ககனைசேஷன் தொழில்நுட்பம்  தொடர்பான மென்பொருளை உருவாக்கும் தொழிலை செய்து வருகிறது. அதாவது  மனிதனுக்கும் எந்திரத்துக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு வகையிலான மென்பொருட்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ரவுண்ட் ஃபண்டிங் முறையில் கோபால கிருஷ்ணன் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் ஏற்கனவே ஐடிஜி வென்சர் இந்தியா, இந்தியா ஏஞ்சல் நெட்வெர்க் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.


''புதுமையான கண்டுபிடிப்புகள் மூலமாக வெற்றியை எளிதாக அடைய முடியும். யுனிப்போர் நிறுவனம் இதை செய்து வருகிறது எனவே அந்த நிறுவனம் கட்டாயம் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என கிரிஸ் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close