Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிராஜுவிட்டி பெற என்ன செய்ய வேண்டும்!

 நான் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி 2002-ல் ஓய்வு பெற்றேன். கிராஜுவிட்டி (Gratuity) தொகையை பெறவில்லை. அதை வாங்க முடியுமா?

பி.சங்கர், சென்னை,.
என்.பி.இசை அழகன், ஆடிட்டர், இசை அண்ட் கோ.
‘‘பணிக் கொடை சட்டம், 1972-ன் கீழ் 5 வருடங்கள் தொடர்ந்து பணியில் இருக்கும் ஊழியர்கள் பணிக்கொடை பெற தகுதியானவர்கள். எனவே, நீங்கள் பணி மூப்பு அடைந்த 30 நாட்களுக்குள் நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்துக்கு விண்ணப்பம் அளித்திருக்க வேண்டும். மனு அளித்த 30 நாட்களில் தங்கள் நிறுவனம் உங்களுக்கு சேர வேண்டிய தொகையைக் கணக்கிட்டு தங்களுக்கும், மாவட்ட தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையருக்கும் அறிக்கை அளிக்கும். நீங்கள் 30 நாட்களில் விண்ணப்பம் அளிக்காதபட்சத்தில், நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்திடம் முறையிட முடியாது. அதற்கு பதில், மாவட்ட தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையருக்கு உரிய படிவத்தில் தாமதத்துக்கான காரணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். தங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால், உங்களுக்கு சேர வேண்டிய தொகை வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close