Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்டு முதலீடு

வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்டு முதலீடு

கையில் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. அது பல வருடங்களுக்கு பிறகு ஒரு கோடி ரூபாயாக கைக்கு வந்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். ஆனால் அதை ஒரு கோடி ரூபாயாக மாற்ற மண்ணில் போடுவதா? அல்லது பொன்னில் போடுவதா என்கிற சந்தேகத்துக்கு புதுவையில் நடந்த நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டத்தில் விடை கிடைத்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முதலில் பேசிய ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் தெற்கு பிராந்திய தலைவர் எஸ். ஹரிஷ் கூறுகையில் “பணத்தை சரியாக திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். பணவீக்கம் தான் இன்று எல்லோருக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அதை சமாளிக்கும் விதமாக நம் பணத்தை முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்" என்றார்.

 

 

 

அவரை தொடர்ந்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன்“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எளிமையானது, வெளிப்படையானது மற்றும் குறைவான செலவில் நிபுணர்களின் நிதி மேலாண்மை கிடைக்கிறது. தொடர்ந்து முதலீட்டில் ஒழுங்கை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடு செய்துவிட்டு அடிக்கடி என்ஏவி மதிப்பை பார்க்கத் தேவையில்லை. 6 மாதம், ஓராண்டுக்கு ஒரு முறை என்ஏவி மதிப்பை பார்த்தால் போதும்." என்றார்.

 


இறுதியாக நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, “நம் பணத்தை எங்கே எப்படி எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை நாம் திட்டமிட வேண்டும். நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்கள் என்பதை விட எப்போது இருந்து முதலீடு செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம். ஒருவர் தன் 25 வயதிலிருந்து, தொடர்ந்து 35 ஆண்டுகள் வரை மாதம் ரூ. 3000 சேமிக்க துவங்கினால், 60 வயது முடிவில் அவருக்கு தோராயமாக ரூ. 1 கோடி கிடைக்கும். (ஆண்டு கூட்டு வருமானம் 10%). மற்றொருவர் தன் 35 வயதிலிருந்து, தொடர்ந்து 25 ஆண்டு வரை மாதம் ரூபாய் 3,000 முதலீடு செய்தால் அதே 10% ஆண்டு கூட்டு வருமானம் கிடைத்தால் சுமார் ரூ. 36 லட்சம் மட்டுமே அவருக்கு கிடைக்கும். எனவே, இளம் வயதிலே முதலீட்டை ஆரம்பிப்பது அதிக லாபம் தருவதாக இருக்கும். என்று கூறினார்.

கூட்டத்தின் முடிவில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

 

 

- சு. கற்பகம்

 

 

 

படங்கள்: குருஸ் தனம்

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close