Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் எதிர்பார்ப்பு - பிளாட் ஆக முடிந்த சந்தை!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (4.1.16) காலை நேர வர்த்தகத்தில் சந்தை சற்று ஏற்றத்துடன் காணப்பட்டது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 47.79 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58.55 புள்ளிகள் உயர்ந்து 26,701.79 புள்ளிகளாக இருந்தது.
 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததே சந்தை அதிகரிக்க காரணமாக இருந்தது.  நுகர்வோர் சாதனங்கள், உலோகம், ஆட்டோமொபைல், சுகாதார மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. எனினும் வர்த்தகத்தின் இடையே கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவு மற்றும் பொது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் சந்தை பிளாட் ஆக முடிவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 10.11 புள்ளிகள் குறைந்து 26,633.13 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 1.75 புள்ளிகள் குறைந்து 8,190.50 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 352.35 3.18
பார்தி ஏர்டெல் 313.90 3.10
ஹெச்சிஎல் டெக் 856.95 2.61
பஜாஜ் ஆட்டோ 2,684.10 2.48
பி.எச்.இ.எல் 127.10 1.84
 
விலை குறைந்த பங்குகள்
 
கோடக் மகேந்திரா 695.60 -2.27
போஷ் 20,336.80 -2.22
ரிலையன்ஸ் 1,067.15 -2.04
ஏசிசி 1,319.40 -1.80
அம்புஜா சிமென்ட்ஸ் 212.15 -1.42

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close